பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - தாத்தாவும் பேரனும்

நாங்கள் வீடு திரும்பி, படகைக் கரை சேர்த்துப் பலகையில் கவிழ்ப்பதற்குள், வேட்டைப் பொருள்களைக் கொண்டு சேர்க்க மும்முறை அலேயவேண்டியிருக்கும். மீன்களே சுத்தம் செய்து, சதுப்புக் கோழிகளைத் தோலுரித்து, உப்பு நீரில் போட்டு வைப்ப தற்குள் இருள் அணுகிவிடும். அலேமீன் பிடிக்கும் தூண்டில்களே வெளியிலெடுக்கவும், அந்தி வேளை சந்திரோதயத்துக்கு வகை செய்யவும் நேரம் சரியாக இருக்கும். இருட்டும் பொழுது, கடற் கரையில் குளிரத் தொடங்கும். வழக்கமாக நான் கட்டைகளைச் சேர்த்து தீ மூட்டுவேன். சிப்பிகளைக் கருக வைப்பேன். அதே சமயம் நாங்கள் அலைகளுடே வலை எறிவோம்.

எட்டு மணி ஆகும்போது, தாத்தாவும் நானும் ஒரு நாளுக் குப் போதுமான வேலை செய்திருப்போம். அதன் பிறகே, மீன் களைக் கயிற்றில் கோத்து, ஆவி பறக்கும் சிப்பிகளோடு சேர்த்து, வீட்டுக்குச் சுமந்து செல்வோம். ஈரக் கால் சட்டைகளை நீக்கி விட்டு, அடுப்பில் காப்பிச் சட்டியை வைப்போம். வேகவைத்த சதுப்புக் கோழிகளையும் சிப்பிப் புழுக்களையும் தின்போம். எப் பொழுதாவது, ஒரு மீனையும் சமைத்து உண்போம். அல்லது வெறுமனே குளிர்த்த நண்டு ஸ்ாலட் சாப்பிடுவோம்.

இதெல்லாம் நடந்து ரொம்ப காலம் ஆகிவிட்ட பிறகு, வால்டர் ஹஸ்டன் செப்டம்பர் கீதம் பாடுவதை நான் கேட்டேன். எனக்குப் பிடித்த மாதங்களில் ஒன்றை அம் முதி யவர் வெகு உயர்வு படுத்தியதாகத் தோன்றியது. ஆனல் அவர் காதல் பற்றியே அதிகம் எண்ணிக்கொண்டிருந்தார். ஆளுல் காதல் என்பது செப்டம்பரின் உண்மைத் தன்மையில் ஐந்தில் ஒரு பங்கு தவிர அதிகமானதல்ல. எல்லா பாத்திரிகர்களும் வீடு திரும்பினர். கடற்கரைகளையும் சதுப்புகளையும் தாத்தாவுக்கும், கழுகுக்கும், எனக்கும் விட்டுவிட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் அமைந்ததுதான் என் செப்டம்பர் கீதம்.

i8 நவம்பரின் சிறப்பு

நவம்பர் நடுத்தரமான சோக மாதம் என் கிறார்கள். பிற்பகல் இறுதியில், இருண்ட வி னில் மரங்கள் மொட்டையாய் காட்சி தரும். பனியினல் மொறமொறத்து, பழுப்புற்றிருக்கு சுறுத்தும்

மாரிக்காலம் காலை நேரத்தில் நம் காதுகளை மாலைக் குளிர் மூக்கில் ஒழுக்கு உண்டாக்கும்.