பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இள:ைம் முதுமையும் - 22

வசந்தருதுவுக்கும் இடைப்பட்ட அது இரண்டின் கெட்ட பண்பு கள் எல்லாம் பெற்றுள்ளது. குளிர் மழை, சிறிது பணி, மிகுந்த காற்று, இயல்பான ஊழல் பலவும் அதனிட்ம் உண்டு என்றுதான் கூறுகிறேன்.

பிப்ரவரியிடம் உள்ள சங்கடம் என்னவென்றால், ஜனவரி போய்விட்டதும், அடுத்து மார்ச் வருவதும் தான். அனைத்தினும் அதிக உதவாக்கரை மாதம் மார்ச். மூக்கை உறிஞ்சுவதையும், காற்று வீசுவது நிற்காதா என ஆசைப்படுவதையும் தவிர வேறு ஒன்றையும் மார்ச்சில் செய்ய முடியாது. வேட்டை முழுதும் முடிந்துவிட்டது. மீன்பிடிப்புக்கு உரியகாலம் இன்னும் வரவில்லே. பள்ளிக்கூடம் மூ டு வ த ற் கு ம் இன்னும் வெகுந்ாட்கள் போக வேண்டும். ஐட்ஸ் ஆவ் மார்ச் பற்றி எச்சரிக்கையோடு இருக் கும்படி அவர்கள் nசருக்குச் சொன்னதில் வியப்பு எதுவுமில்லை. தான் ’’ என்றார் தாத்தா. ஐட் என்பது என்ன என்று நான் தாத்தாவைக் கேட்கவில்லை. அவர் விள்க்கம் தருவாரே என்ற பயம் எனக்கு. -

ஆனல் நாம் மார்ச் மாதம் பற்றிப் பேசவில்லையே. பிப்ரவரியே நமது விஷயம், ஒரு காரியத்தை, இதர மாதங்களில் செய்வதைவிட, பிப்ரவரியில் சிறப்பாகச் செய்ய முடியும். காடை சுடுவதுதான் அது. வெகுகாலம் நான் அதை நம்பவில்லை. ஆளுல், பிப்ரவரிதான் மிகச்சிறந்த காடை மாதம் என்று தாத்தா சத” வற்புறுத்தினர்.

ஒருநாள், மெதுவாய், குளிரோடு, அசிங்கமாய், ஒரே நிதாக மாக நசுநசுவென்று துாற்றிக்கொண்டிருந்தது. உடலை தீ போ தாக்கி, காதுகளைப் பணிக்கட்டிகளாக்கி, மூக்கில் நீர் ஒழுக வைக்கும் குளிர் நீடித்தது. வானம் கரிய சிமிட்டிபோலிருந்தது. ஜன்னல் சட்டங்களிலும், முன் மண்டபக் கூரையிலும் பனிக் கட்டித் துணுக்குகள் தொங்குவதைக் காணமுடிந்தது. தாத்தா நெருப்பின் முன் அமர்ந்திருந்தார். தீ வலுவுடன் எரிந்ததால், சு வா லைக ள் புகைப்போக்கியினுள் புகும்போது இறைச்சல் எழுந்தது. அவ்வப்போது அவர் குனிந்து, தீயில் துப்பினர். அப்பொழுது, கொல்லன் குதிரை லாடத்தைப் பதப்படுத்து வதுபோல், இஸ்ஸ்ஸ் ‘ எனும் ஒலி எழுந்தது.

தாத்தா தன் பாதத்தை நீட்டி, முற்றிலும் எரிந்துவிட்ட ஒரு கட்டையை மெல்ல இடித்தார். அது செங்கங்குகளாய் சிதறி, அடிப்பகுதியில் விழுந்தது; மேலேயுள்ள கட்டையின் ஊடாக, புதிய தீக் கொழுந்துகளை எவ்வி எழச் செய்தது. தாத்தா என்னே நோக்கினர். - ...

எப்பொழுதும் பெரியவர்களை பையன்களிடமிருந்து பிரிப் பதற்கு ஒரு வழி உண்டு. மற்றவர்கள் எல்லோரும் கம்மா உட்கார்ந்து முணமுணத்து, அதைச் செய்ய முடியாது என்று வாதாடிக்கொண்டிருக்கையில், ஒருவன் சிரமமான வழியிலாவது

J