பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேர்னும்

ஒரு காரியத்தைச் செய்கிருளு என்று கவனிப்பதுதான் அது.” அவர் இன்னொரு தடவை திமீது எச்சில் துப்பினர். அறிவுக்கூர்மை பெற்றி கிழ நாய்போல், தலையை ஒருபுறமாய் நீட்டி என்னேப் பார்த்தார். உறுதி கொஞ்சம் தளர்ந்த உடனே, ஒன்றைச் செய்வது நாகரிகமாக அல்லது க்கமாகத் தோன்றாதபோது, பெரும்பலர் செயல் புரிவதை விட்டுவிடுகிறார்கள். அதுவே ஒரு சில தனி மனிதர்களுக்கு விசேஷக் கவர்ச்சி அளிக்கிறது. பணி யாளர்கள் ஒடிப் பதுங்கியதும், களத்தை பெரிய மனிதர்கள் தம்ம தாக்கிக் கொள்வர் ‘ என்றார்,

நான் எதுவும் சொல்லவில்லை. இதற்குள்ளாக, கிழவர்ை நான் நன்கு அறிந்திருந்தேன். அன்புக்குரிய ராக்கன் போல, தரும் தந்திரம் நிறைந்தவர். நான் கொஞ்சம் எட்டிப் பார்க்க வேண்டியதுதான், உடனே அவர் என்னைப் பிடித்துக் கொள்வார். தான் செய்ய விரும்பாத ஏதோ ஒன்றை நான் செய்யவேணும் என அவர் ஆசைப்பட்டார். புதுப் புகையிலை வாங்குவதற்காக மழை யோடு க்டைக்குப் போய்வருவது, அல்லது மேலும் விறகு சேகரிக்க வெளியே போவது, அல்லது ஷேக்ஸ்பியர் பற்றிப் பாடம் சொல்வது, அல்லது இதுபோன்ற ஒரு வேலேதான்.

தாத்தா தொடர்ந்து பேசினுர் காடைகளையே எடுத்துக் கொள். நன்றி அறிவிப்பு நாள் சமயம், பருவகாலம் தொடங் கியதும், ஒவ்வொரு அடுமடையனும் அவன் தம்பியும், காட்டுக்கு வந்து, நெடுகிலும் சுட்டுத்தள்ளி, பரஸ்பரம் இடித்து நெருக்கிக் கொண்டு திரிவார்கள், பறவைகள் வெறி பெறும். நாய்கள் கிளர்ச்சி அடையும் : பறவைகளைக் குழம்பவைக்கும். பதுங்கிச் சென்று குறி பார்க்கவேண்டிய இடத்தில் அவை பறவைக் கூட் டங்கள் மேலேயே ஒடும். தரை வறண்டு கிடக்கிறது. பறவை கள் நிலையாக நிற்பதற்குப்பதில் ஒடிவிடுகின்றன. நயமான தனிப் பறவை வேட்டை என்று எதுவுமே கிடைக்காது ; ஏனென்றால் காடைகள் சிதறிப் போவதற்குப் பதிலாக, ஒருசேர எழுந்து கும்பலாகவே அமரும். - - - -

“ அப்புறம் கிறிஸ்துமசும் புதுவருஷ விழாவும் வந்துவிடும். பொழுதுபோக்காகக் காடை வேட்டையாடுகிறவர்கள் அலுத்துப் போகிரு.ர்கள், அதிகமான குளிரும், அதிக மழையும் வருகின்றன. சுட வருகிறவர், துப்பாக்கிகளில் துரு ஏருமல் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தடவையும் அவற்றை சுத்தம் செய்ய நேர்கிறது. ஆகவே அவர் நாய்களைக் கட்டிப்போடுகிறார் ; வேட்டையை அடுத்த வருஷம் வர்ை மறந்து விடுகிரு.ர். இதன் மூலம் காடு பட்டனத்து எத்தர்கள், நாடாக் குமாஸ்தாக்கள், உல்லாச வேட் டையாளர் ஆகியோரிடமிருந்து விடுதலை பெறுகிறது. இதற்குள் பறவைகள் நிதானம் அடைகின்றன. நாய்களும் போதிய பயிற்சி பெற்று, ஒரு நிதானத்துக்கு வருகின்றன. வேட்டைக்குத் தப்பிய சிறு பறவைகள் பெருஞ் சிறகுகள் பெற்றுள்ளன. பறவைகளைக்