பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24% எண்ணிப்பார்க்க ஏற்ற மாதம்

  • மார்ச் எண்ணிப்பார்க்க ஏற்ற இனிய மாதம். அப்பொழுது நாம் வேறெதுவும் செய்ய முடியாததுதான் காரணம் என நான் நினைக்கிறேன். வாழ்வின் இலையுதிர் காலத்தில்தான் நாம் கிழடா கிருேம் என்று எவரையும் சொல்ல அனுமதிக்காதே. மார்ச்சில் அது ஏற்படுகிறது ‘ என்று தாத்தா சொன்னர். -

நமது கொடிய எதிரிக்குக் கூட நாம் அளிக்க விரும்பாத ஒரு நாளில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சும்மா இருந்தோம். நம் பற்களை உதிர வைக்கும் விதத்தில் காற்று வீசியது. நாம் வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு சமயமும் நமது சருமத்தை அரித்தெடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒரு சில மலர்கள் தலை தூக்கின. உடனே, யாருமே எதிர்பார்த்திராத புதிய உறைபனி வந்தது. புஷ்பங்கள் தம் தலைகளைச் சுருட்டி மடக்கிக் கொண்டன. வாத்துக்கள் வடக்கே பறந்துபோக இன்னும் கொஞ்சம் நாளாக வேண்டும். இப்ப எல்லாம் முடிந் திருந்தன-காடைகள் காலம் தீர்ந்தது ; மீன் பிடிப்பு துவங்க வில்லை ; அந்நாட்களில் டெலிவிஷன் கிடையாது. - நான் எழுந்து, வெளியில் மழை பெய்யும் போது திரியும் அமைதியிழந்த பூனை போல், அங்குமிங்கும் நடக்கலானேன். நான் நடப்பதைத் தாத்தா சற்றே கவனித்தார். பிறகு மீசைக்குள் ளாகக் கிளுகிளுத்துச் சிரித்தார். இருந்த இடத்தில் இருப்பதையே அவர் விரும்பிஞர். அவர் நடக்க ஆசைப்படவில்லை. எங்கும் போகவுமில்லை.

‘ கலோமல் குணப்படுத்த முடியாத கோளாறு எதுவும் உனக்கு ஏற்பட்டுவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். நீ ஒரு நிமிஷம் உட்காருவதானால், சிறு உபதேசம் ஒன்று உனக்குச் சொல்வேன். அது இதுதான் : ஒருவரும் இளமையை என்றுமே திரும்பப் பெற்றதில்லை. எவராவது அப்படி அடைந்திருந்தால் அது பற்றி நான் கேள்விப்பட்டிருப்பேன். நானும் அதை வாங்கியிருப் பேன். ஆகவே, ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால், வயது அதிகம் ஆகஆக, அவன் சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, முன்பு தான் செய்த-அநேகமாக இனி என்றுமே தான் செய்ய முடியாத-காரியங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நமது வலிமையை மீண்டும் பெறும் வழி அதுதான். உணர்வு அஜீரணம் ஏற்படாதவாறு தடுக்கும் இனிய முறையும் அதுவே. நீ செய்ததை எல்லாம் எண்ணிப் பார்த்து ஆலுத்துப் போனல், வருங்காலத்தில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று எண்ணுவதில் உன்