பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிப்பார்க்க ஏற்ற மாதம்

நேரத்தைச் செலவிடலாம். நீயே மெச்சும் விதத்தில் அண்மையில் ஏதாவது செய்தது உண்டோ?” என்றார் அவ்ர். -

ஆமய்யா. அநேக காரியங்கள்’’ என்றேன். நல்லது பையா. அவற்றை நீ உன் மூளையில் புதுப்பித்து, அச் செயல்களைச் செய்தபோது உனக்கு எப்படி இருந்தது என்று என்னிடம் சொல்லு, சிறு விஷயங்களில் வெகு அதிகம் உன் ஞாபகத்தில் இராது என்று நான் பந்தயம் கூறுகிறேன். புகழ்ச்சிக்கு உரிய வேட்டைப் பொருள்களோடு நீ வீடு திரும்பிளுயே, அன்று நான்கு வாத்துக்களே எப்படிச் சுட்டாய் என்பதிலிருந்து தொடங்கு ‘ என்று தாத்தா கூறினர். - நான் நான்கு வாத்துக்களைச் சுட்டு, புகழத்தக்க வேட்டை களோடு வீடு திரும்பிய தினம் போன்ற ஒரு தினம் என்றும்ே இருந்ததில்லை. ஒன்பது குண்டுகளில் பதினைந்து காடைகளைச் சுட்டது எதிர்பாராத ஒரு நாள் ஆகும். ஆளுல், தற்செயல் நிகழ்ச்சிகள் கணக்கில் சேரா. ஒவ்வொருவரும் பூரணத்துவத்தை ஒரு முறை எய்துகிறார்கள். அன்று நான் அதை அடைந்தேன்; அது என் கைக்கு எட்டியுள்ளது என்றும் அறிந்தேன். ஆளுன் அன்று நான் அதை நிர்ணயிக்க முயலவில்லை. அது என்க்குக் கிட்டிவிட்டது என்று தானகவே உணர்ந்தேன்.

அது இப்படி நிகழ்ந்தது: மாகாணத்தின் கீழ்க் கோடிக்கு, ஹாட்டராஸ் பகுதிக்கு, நான் சில நண்பர்களோடு போயிருந்தேன். கனடா வாத்துகளுக்கு அது நேர்த்தியான பெரும் வருஷம், ஒருவரும் அவற்றை அதிகமாகச் சுடவில்லை. அதனுலேயே நேர்த் தியான ’’ என்கிறேன். வேட்டை நேரம் முடியும் வரை, அவை அகன்ற நீர்ப்பரப்பின் மீது இருக்கும். பிறகு இரை தேடிச் சோள் வயல்களுக்குள் பறந்து போகும். கடியாரம், வைத்துக் கொண்டு அவை செயல் புரிந்திருக்கவேண்டும். ஏனெனில், ஒழுங்கான சுடுதல் முடிந்ததும் அவை கூச்சல் போடுவதை நன்கு கேட்க முடியும். பிறகு அவை கோழிக் குஞ்சுகள் போல் சாதுவாக இரை யுண்ண வரும். -

செய்வதற்கு அதிகமாக எதுவும் இல்லாததால், தான் பணயம் கூறிக்கொண்டேயிருந்தேன். அவற்றின் காலக் கணிப்புக் குறி தவறுதலாக முடியும், அவ் வாத்துக்களில் சில கொஞ்சம் முன்ன தாகவே அந்த நீர்ப்பரப்பை விட்டு வெளியேறும், அப்படி அவை வரும்போது நான் தயாராக இருப்பேன் என்றுதான். ஆகவே, சோள வயலில் உள்ள ஒரு கால்வாயில் நான் எனக்காக ஒரு கூண்டு அமைத்து, இரண்டு துப்பாக்கிகளுடன் காத்திருந்தேன். அவை: இரண்டுமே 12 இனம் ; இரட்டைக் குழல் பெற்றவை தான், வாத்துக்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வரத் தீர்மானித்தால், நான் துப்பாக்கி பற்றாது திகைக்க விரும்பவில்லை. இரண்டிலும் நிர், குண்டுகளைக் கெட்டித்தேன். நிர். 1. குண்டுகள் ஒரு மானைச் சுடுவதற்குப் போதிய அளவு பெரிதாக இருக்குமெனில்,