பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிப்பார்க்க ஏற்ற மாதம் ”

வாத்து வெள்ளேத் தோலைவிட கடினமாக இருந்தது. ஆயி னும் நான் அதை மகிழ்வுடன் தின்றேன். -

துப்பாக்கிகள் புதிய கெளரவம் பெற்றுவிட்டதாக நான் நினைத்தேன். ஏனென்றால், ஒரே தடவையில் நான்கு கனடா வாத்துக்கள் சுட்ட எவரையும் நான் ஒருபோதும் சந்தித்ததில்லே. இனி என்றுமே நான்கு கனடா வாத்துக்களுக்குக் குறைவாக சுட விரும்பாத ஒரு மனிதனைப் போல் நானும் இருந்தேன். -

இதையே நான் தாத்தாவிடம் கூற முய்ன்றேன். நான் நான்கு யானைகளைச் சுட்டது போலிருந்தது. அது. அத்ததைய மாபெரும் நாள் என் வாழ்வில் என்றுமே எதிர்ப்படவில்லே. சிதறி ஓடிய தனிப் பறவைகளை நாம் வேட்டையாடிளுேமே ஒரு நாள்-’ - :* - ?

தாத்தா தன் கையை உயர்த்தி, என் பக்கம் மெதுவாக நீட் டினர். வேண்டாம். இன்று இதற்கு அதிகமாக நினேவு கூற வேண்டாம். இல்லையேல், உன்ன்ை ஒரு தொணதொணப்பன் என்று எல்லோரும் சொல்வார்கள். விாத்துக்களைப் பற்றி போது மான அளவு எண்ணிவிட்டாய். மார்ச் மாதத்தின் அடுத்த மழை நாளன்று நினைத்துப் பார்ப்பதற்காக நீ சிலவற்றை சேமிக்க வேண்டும். ஆயினும், எனக்கு ஒரு விஷயம் சொல்லு. அந்தி நாளைப் பற்றி மிகத் தெளிவாக நினைவில் நிற்பது எது?” என்றார் தாத்தா. -

எண்ணும்முன்பே பதில் சொன்னேன் நான் ‘அந்த நாள். அது முழுவதுமேதான். அதில் உள்ள சின்ன விஷயங்கள் எல்லாவற். ற்ையும் விடப் பெரிதானது எதுவும் உண்மையாக அதில் இல்லை. ச்ோள வயலில் கால்வாயுள் உட்கார்ந்து அதைத் தொடங்கிய போதே அதிர்ஷ்டமிருப்பதை நான் உணர்ந்தேன். வாத்துக்கள் வரக்கூடிய ஒரே ஒரு நாள் அது என்பதை ஒருவாறு அறிந்தேன். அதை அறிந்தேன் எனவும் நான் அறிந்தேன். அதுதான் ஒத் றைத் தனிப் பெரும் விஷயம். அதற்குரிய சரியான நாளாக அது அமையும் என நான் அறிந்தேன்.” -

நல்லது. ஒன்றை நினைவு வைத்துக்கொள். மீண்டும் நீ எண்ணிப் பார்க்கத் தொடங்குகையில், ஒரு நாளை மாண்புபடுத் தும் எல்லா விஷயங்களையும் விடப்பெரியது எதுவும் எந்த ஒரு நாளிலும் கிடையாது என்பதை ஞாபகப்படுத்திக்கொள். நீயும் என்னளவு பெரியவனனதும், இது உனக்குக் குறிப்பிடத் தகுந்த சுகம் தரும். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை நீ புரிந்து கொண்டாயா? ‘ என்று தாத்தா எச்சரித்தார்.

ஆமய்யா. நிச்சயமாய் என்றேன். ஏனென்றால் இது என்னையும் மீறி மிகவும் ஆழ்ந்துபோய்க் கொண்டிருந்தது,

உண்மையில், நான் புரிந்துகொள்ளவேயில்லே. மேடையி னின்று அகலவே நான் அவாவினேன். ஆளுல் இன்று எனக்குப் புரிகிறது. நான் வெகு சிரத்தையோடு-ஒரு புத்தம் பற்றிக்கூட