பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. தாத்தாவும் பேரனும்

கிறது. கூச்சலிடுவதற்கு எவருமில்லை அங்கே. கடற் பறவைகள் அமைதியாகவே கத்துகின்றன. அலைகள் மென்மையாகவும் திருப்தி யோடும் கரைமீது மோதுகின்றன. ஆமைகளின் அடிச்சுவடுகளைத் தேடித் திரிந்தேன் நான். தாத்தாவைப் போலவே நானும் எண்னேலானேன். நீரையும் மலைகளையும் கடவுள் படைத்தபோது, அவர் என்ன செய்கிறார் என்பதை அவரே நன்கு அறிந்திருப்பார் என்று நினைத்தேன். . -

நாங்கள் ஒரு மைல்தான் நடந்திருப்போம். அதற்குள் ஆமையின் புதிய தடங்கள் சில தென்பட்டன. சில சுவடுகள் மினலில் இன்னும் பசுமையாகவே இருந்தன. கடலுக்குத் திரும்பும் சுவடு எதுவுமில்லை. நாங்கள் மிகவும் சுலபமாக அவற் தைப் பின்பற்றிச் சென்று, மணல் கு ன்று க ள் ஆரம்பிக்கும் இடத்தை அன்டந்தோம். அங்கு கடல் ஒட் (Sea Cats) பயிர் தலையெடுக்கவில்லை. அங்கேதான் ஆமை இருந்தது. சாப்பாட்டு அறையில் உள்ள மேஜை அளவு பெரிது அது.

அது ஆழமான குழிபறித்து அதனுள் முட்டைகளைக் கொட்டு வதற்கு வசதியாகக் குழாய் போன்ற ஒன்றைத் தொங்க விட் டிருந்தது. அப் பள்ளம் அடியில் பெரிதாகவும் மேலே சிறிதாகவு மிருந்தது. அதில் பாதியை முட்டைகளால் நிறைத்திருந்தது. நிமிஷத்துக்கு ஆறு எனும் வேகத்தில் முட்டை கள் விழுந்து கொண்டிருந்தன. வளைந்த பெரிய மூக்கு அந்த ஆமைக்கு இருந்தது. அதனுல் வயது முதிர்ந்த கிளி போல் தோன்றியது அது. அரை கு ையாக மூடியிருந்த அதன் கண்களில் நீர் நிறைந்து நின்றது. ஆபை முட்டையிடும் பொழுது ஏன்_அழுகிறது என நான் அறியேன். வேதனை தான் காரணமாக இருக்கவேண்டும். ஆனல் கணவனிடம் கோபம் கொண்டு, அதையே சாக்காக வைத்து அழும் மனைவி போல் தான் அதுவும் அழுகிறது. . ஆமைகள் உண்மையிலேயே விசித்திரமான பிராணிகள்தான். ஆண் பெண்ணே விட மிகவும் சிறியது என்றும், அது கடலே விட்டு ஒருபோதும் வெளிவருவதில்லை என்றும் சொல்கிரு.ர்கள். அது கடலிலேயே வசிக்கிறது. அங்கேயே இனவிருத்தி செய் கிறது. பெண் முட்டையிடத் தயாரானதும், க ட லி னி ன் று வெளியேறி, வேதனையோடு கரைமீது நகர்ந்து, தானே பள்ளம் பறிக்கிறது. பிறகு ஒரு குழாய் வழியாக அது முட்டைகளைச் சிந்துகிறது. முடிவில் குழியை முடிவிட்டு அது மீண்டும் கடலுக்குச் செல்கிறது. சூரியன் முட்டைகளுக்குக் கதகதப்பு அளித்து, குட்டிகள் பிறக்கத் துணைபுரிகிறது. தோல் போன்ற முட்டைகளைக் கிழித்து வெளியேறியதும் குட்டிகள் நேரே தண்ணீரை நோக்கி ஒடுகின்றன. தன் குட்டிகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஆமை கூட வெளியே திரியும் என நான் நினைப்பது உண்டு. ஆனல் விஷயங்களை அறிய வேண்டும் எனும் ஆவல் ஆமைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. . .