பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேர்னும்

எண்ணிப் பார்க்கிறேன். நான் ஞாபகப்படுத்துகிற எந்த ஒரு நாளிலும், அன்ற்ைய காலை உணவாக நான் பெற்றதை விடப் பெரிய நிகழ்ச்சி ஒன்றுகூட இல்லைதான்: -

வேட்டை வெறி *

அன்றைய தினம் கருமையாக இருந்தது. காற்று குடா நீரை நுரை எழக் கலக்கியது. மேகங்கள் தாழ்ந்து, அச்சுறுத்திப் புரண்டன. பனி வரும் போல் தோன்றியது. வீட்டின் கதகதப் பில் புகுந்ததும் என் காதுகள் தீப்பிடித்துக்கொள்ளும் போலிருந் தன. சிறு துளிகள் என் மூக்கில் தொங்கி நின்றன. என் கைகள் குளிர் நீரால் சுருக்கமுற்று, ரேடிஷ் கிழங்குகள் போல் சிவப் பாய் விளங்கின. சேறு நிறைந்த பூட்ஸில் சிக்குண்ட பாதங்க கிரில் எவ்வித உணர்வுமில்லை. என் வாழ்வில் அது போன்ற ஆனந்தத்தை நான் என்றுமே அனுபவித்ததில்லை.

‘’ நம் இருவரையும் பாரேன். விறைத்துப் போளுேம். நியூ மோனியாவால் தமக்கு மரணம் ஏற்படலாம். நனந்து, சகதி படிந்து, துக்ககரமாய் தோன்றுகிறுேம். ஆனல் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து செஷயர் பூனைகள் போல் பல்லிளிக் கிருேம். நாம் லூன் பற்வைகள் பேர்ல் வெறி பிடித்தவர்கள் தான். ஆணுல், வாத்து வேட்டையாளன் ஆவதற்கு ஒருவன் சிறிது வெறி பெறவேண்டியது அவசியமே. வயிறு நிறைய மீன் தின்ற கிழட்டு ஆண் மல்லார்ட் வாத்து ஒன்று தப்பிவிடக் கூடிய அளவுக்கு நம் பக்கத்திலே வரும் வாய்ப்பு கிட்டலாம் என்று எதிர்பார்த்து பணியில் உறையும்படி பதுங்கியிருப்பதற் காக, சரியான மன நிலை பெற்ற எவனும் உதயத்துக்கு முன்னரே விழித்தெழ மாட்டான்’ என்று தாத்தா கூறினர். -

நாங்கள் பூரணமான ஒரு நாளை அனுபவித்தோம். தண் னிரைக் கலக்கிய காற்று வாத்துக்களின் பெரிய கூட்டத்தைச் சிதறடித்தது. நீலப் பறவை நாளில் குடாவின் மத்தியில் வெறித் தனமாக அமர்ந்திருக்கும் அந்தக் கூட்டத்தைத்தான். தணிவாக அமைந்த மேக விதானம் அவற்றைத் துப்பாக்கி எல்லேயினுள் அடக்கியது. ரகசியமான சிறு குட்டைகளிலிருந்த நீரைக் காற்று வெளியேற்றிவிட்டது. எப்பொழுதாவது ஒரு தடவை நிகழ்வது போல, இப்பவும் வாத்துக்கள் தங்குமிட்ம் தேடி அலைந்துகொண் டிருந்தன. பூனைகள் பேய் மருட்டிச் செடியிடம் வருவது போலவே, அவையும் வசீகரிக்கும் ஏய்ப்புகளிடம் வந்து சேரும்.