பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டை வெறி

பருவ நிலை சகாயம் செய்யும்போது, கறுப்பு மல்லார்ட் வாத்து போல் சுறுசுறுப்பானது வேறு எதுவுமில்லை. இங்கிருந்து ஜப்பான் வரை அது பார்க்க முடியும். ஒரு மைல் உயரத்தில் இருந்தபடியே அது போலி பொம்மையைக் கண்டு கொள்ளும். வழக்கமாக அது அவ்வளவு உயரத்தில் தான் பறக்கும். ஆணுல் பருவ நிலை மாறி, காற்றும் அதிகமாக வீசிஞல், அத்துடன் சிறிது பனியும் சேர்ந்தால், அதுபோல் மடத்தனம்ானது வேறு எதுவும் இராது. சாதாரண வாத்தைவிட, முதிர்ந்த கனடா வாத்து பொதுவாக புத்தி கூர்மை உடையது என்று நான் எண்ணுகி றேன். பருவ நிலை சரியாக இருந்தால், நாம் அவற்றை மின்ற விடத்திலிருந்து மட்டையால்தான் அடிக்க வேண்டும். இன்று தாயை இழந்து தவித்த வாத்து எப்படி வந்தது ? என்றார் தாத்தா. o

அசுத்தமான சாம்பல் நிற வானத்தில் பறந்த அணியி லிருந்து விலகி வந்து, பரிதாபகரமாகக் கத்திக்கொண்டிருந்தி, முக்கால்வாசி வளர்ச்சி பெற்ற ஒரு கனடா வாத்து பற்றியே தாத்தா குறிப்பிட்டார். அவர் அதைக் கண்டு பரிகாசதாய் சிரித் தார். சில பெரிய வாத்துக்கள் வெள்ளைத் தோலே விடக் கடினமாக இருக்கும். ஆணுல் இந்தச் சின்ன வாத்து, உன் பாட் டியின் அடுப்புக்கு வெகு நேர்த்தியாக அமையும். இப்பொழுது நான் அதை எப்படிக் கீழே இழுக்கிறேன், டார். அதன் அம்மா மாதிரி நான் கத்தப் போகிறேன்’ என்றார், . ...,

அவர் வாத்துக் குரல் கருவியை எடுத்து, ஒரு வாத்தின் அம்மா கூப்பிடுவது போல் ஒலி எழுப்பினர். ஒலிகளே எழுதும் வழி எதுவும் என்னிடமில்லை. ஆளுல், தாத்தாவின் அழைப்பொலி எட்டிய உடனே, வழி தவறிய அந்த வாத்து தன் கழுத்தைக் கீழே தாழ்த்தியது. சிற்கடிப்பை நிறுத்தி, மீன் மேல் பாயும் பருந்து பேர்ல, வான்த்திலிருந்து கீழே வந்தது. அது நேரே எங்கள் மறைவிடத்திற்குள்ளேயே வந்தது. அதை நோக்கி நான் சுட்டேன். அபூர்வம்ாக் எப்பவாவது ஒரு தடவை செய்யக் கூடிய செயல்களில் ஒன்றை நானும் செய்த்தை உணர்ந்தேன்என் துப்பாக்கியை வெறுமனே சுட்டேன். அதை கெட்டிக்க நான் அடியோடு மறந்துவிட்டேன். அவ் வாத்து பறந்து சென் றது. வருத்தப்படாதே. அதை கெட்டி, நான் வாத்தை மறு படியும் அழைக்கிறேன். இம்முறை நன்றாகச் சுடு. இல்லையேல் அதுவும் நம்மொடு இம் மன்றப்பில் சேர்ந்துவிடும் ‘ என்று தாத்தா கூறினர்.

வாத்தின் கூச்சலை அவர் மீண்டும் எழுப்பினர். அவ் வாத்து திரும்பியது. எங்கள் இடத்துக்கு நேர்ாக வந்தது. இந்தத் தட்வை நான் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருந்தேன். அவற்றை அதன் தலையிலும் கழுத்திலும் சேர்த்தேன். அது பாறை மாதிரி வந்து விழுந்தது.