பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஒழுங்கற்ற விதமாகத் தண்ணீரைத் தாக்குகின்றன என்று கவனிப்பது தான்.”

தாத்தாவும் நானும் சதா நிலையாக மறைவிடத்தில் பதுங்கி யிருப்பவர்கள் அல்ல. அதை எதிர்ப்பவ்ர் அவர். ஒளிவிடம், ஒசை, உறவுப்பறவையின் திடீர்ச்சாவு இவற்றின் தொடர்பை வாத்துக்கள் புரிந்து கொள்ளும் , பிறகு அவை துப்பாக்கி எல்லைக் குள் வராமலே விலகிப் போய்விடும்; வாத்து வேட்டையாளர் களைப்போலவே அவையும் மனநிலை இழந்து, வெறிபிடித்து அலைந்தால்தான், அப்படிப் போகாது, அருகில் வரும் என்று அவர் கூறினர். .

அதற்குரிய வழி ஒரு பேட்டோவில் போவதே. காஜன்கள் அதை பிரோக் என்கிறார்கள். ஆனல் பேட்டோ - அது படகு என்பதற்கு ஃபிரெஞ்சுப் பதம், எனது அறியாத இளம் நண்பனே-தட்டையான அடிப்பாகம் பெற்ற சிறு படகு ஆகும். காற்றும் நீரும் சரியான நிலையில் தோன்றும் ஒரு இடத்துக்கு அதைத் தள்ளிச் சென்று, நாணல் அல்லது கோரைப் புதரில் நிறுத்தி வைக்க வேண்டும். உனக்காகக் கொஞ்சம் ரோலோ அல்லது ட்யூல்ஸ்- நாணல்கள் என்பதற்குரிய ஃபிரெஞ்சும், ஸ்பானிஷாம் இவை-வெட்டி எடுத்து, உன் படகைச் சுற்றிலும் மறைப்பு அமைக்க வேணும். நீ எப்பொழுதும் நாணல் நிறத்தை ஒத்திருக்கும் காக்கித் தொப்பியை அணிந்து, சுடுவதற்குத் தயாராகும் வரை உன் முகத்தைத் தாழ்த்தி வைக்கவேண்டும். ஏனென்றால், டீல் அல்லது நீல அலகு வாத்தைத் தவிர மற்றது எதுவும், அது பறக்கிற உயரத்திலிருந்தவாறே, நமது வெள்ளை முகத்தை அல்லது வழுக்கைத் தலையைக் கண்டு கொள்ளும். அப்புறம்-நான் சொன்னதுபோல், பருவநிலை மகாமோசம்ாக இருந்து, அவை கவலைப்படுவதை விட்டுவிட்டால் ஒழிய-உலகத்தி லுள்ள எல்லா வசிய பொம்மைகளும், அழைப்புகளும் அவற்றைக் கீழே இறங்கும்படி செய்யா. நாணல் மறைப்பில் ஏற்படுத்திய சிறு துவாரம் வழியாக நீ வெளியே பார். மறைவிடத்தைச் சுற்றி அவை இருமுறை வளையமிடட்டும். இரண்டாவது வளையத்தில் அவை க்ரீம் மாதிரி வந்து சேரும்,

பொறுமை உள்ள ஒரு மனிதன் மிக அதிகமான வாத்துக் களைச் சுடலாம். ஏனென்றால் அவை கால்களைத் தொங்கவிட்டுச் சிறகுகளை உயர்த்திக்கொண்டு இறங்கும்போது, முதல் வாத்தை சுயேச்சையாக அடித்துவிடலாம். அப்புறம் நீ செய்ய வேண்டிய தெல்லாம், காஜன்கள் சொன்னது போல, மறு பாதி மேலே கிளம்பும் பொழுது மூக்கை நோக்கிச் சுடுவதுதான். தண்ணீரை அப்பதான் விட்டுவிட்டு, வான் நோக்கிப் பறக்கும் மல்லார்ட் வாத்து உண்மையில் வேகமாக இயங்குவதில்லை. ஏனெனில் உயரே எவ்வ அது போராடுகிறது. அதனுடைய கேந்திரோத் ஸ்ாரி சக்தி நிலைகுலைந்து விடுகிறது” என்றார் அவர்.