பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

காசியங்களைச் செய்தாக வேண்டும். வாழ்க்கை அப்படித்தான் அமைந்துள்ளது. எல்லாம் ஒரே வழியில் நடைபெறுவதில்லை. எனக்கு ஒரு குண்டு எடுத்துத் தா. -

இதை மனதில் கொள். ஞானம் என்பது சேர்த்து வைப் பதே ஆகும். ஒரு எலி பல பொருள்களையும் சேர்த்து ஒளிப்பது போல்தான். உன்க்குத் தெரியும் என்று நீ அறியாத சில விஷயங் கள் பின்னர் எப்பொழுதாவது தலே தூக்கும், என்றாவது ஒருநாள் அவற்றில் ஒன்று தேவைப்படும் என்ற நினைப்போடு, உன் ம்ண்டை வில் ஏகப்பட்ட விஷயங்களே நீ திணிக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. இதையும் நினைவு வைத்துக்கொள் : ஆழாக்கு மூளையில் ஒரு படி அறிவைப் புகுத்த முடியாது. இதன் கருத்து என்ன வென்முல், மூளை எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ, அதற்கு வசதியாக அதைப் பெரிது பண்ணவும், இளகவைக்கவும் வேண்டும். வரும் மாதத்தில் நீ இன்னும் அதிகமான மார்க்குகள் பெறுவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். இல்லாவிடில், இந்த் இலையுதிர் காலத்தில் நாம் காடைகளை வேட்டையாடப் போவதில்லை. இது பயமுறுத்தல் அல்ல, வெறும் யோசனைதான். இனி நாம் மீன் பிடிக்கப் போவோம்’ என்றார்.

தாங்கள் நிறைய மீன் பிடித்தோம். பெரிய நீல மீன்கள் சதுப்பில் இரையுண்ண வந்திருந்தன. முரசு மீன்களும்-அது தான், கால்வாய் பாஸ்-வந்திருந்தன. சோதா மீன்கள் மிகப் பெரும் அளவில் ஓடின. வெகு நன்றாக வீசிய வடகாற்று சதுப்பில் பள்ளங்கள் பறித்திருந்தது : மணல்திட்டுகளை உறுதிப்படுத்தியது. நாம் செய்ய வேண்டியது, தூண்டிலே ஒரு சிறிது சுண்டுவதுதான். நான்கு அவுன்ஸ் கனமுள்ள கோபுர வடிவப் பளு நேராகச் சண்டைக் குணம் நிரம்பிய எதனுடைய பெரிய வாயிலோ போய், விழும். அன்று முப்பது ராத்தல் கனமுள்ள முரசு மீன் ஒன்றை நான் பிடித்தேன், தாத்தா நாற்பது ராத்தல் மீன் ஒன்று பிடித்து என்னை மிஞ்சிஞர். நாங்கள் களைப்படைந்ததும், மீன் பிடிப்பை: நிறுத்திகுேம். எங்கள் காரின் பின் பகுதியை நிரப்புவத்ற்குப் போதுமான மீன்கள் கிடைத்திருந்தன. மிகவும் அலுப்படைந்து நாங்கள் வீடு அடைந்தோம், மீன்களைச் சுத்தம் செய்வதற்கு அன்று தாத்தா எனக்கு உதவி புரிந்தார். ஒரு சிறுவன். அதைச் செய்ய முடியாத அளவு மீன்கள் மிகுதியாக இருந்தன.

நாங்கள் சாப்பிட்டோம்-அதிகமாக அல்ல. நான் களைத் திருந்ததுதான் காரணம். கொஞ்சம் சோள ரொட்டி, பால், முட்டைகள் பன்றி இறைச்சி, ஜெல்லி, இவ்வளவ்ே. நான் படுக்கச் சென்றேன். ஆனல் தூங்க முடியவில்லை. அல்ஜீப்ராவும் சrவரும் என் தலைக்குள் தங்களைத் தாங்களே துரத்தி வள்ைய வளைய வந்தார்கள். அவர்களோடு நீல மீன்கள், கால்வாய் பாஸ், காடை, மூகாமிடுதல், குதிரை சவாரி, சொர்க்கம், நரகம், நிரந்தரம் என்பது எவ்வளவு நீளம் என்னும் நினைப்பு எல்லாம் கலந்து