பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானகத்தில் உலா . 23.

அப்ரடைட் (தாத்தாவின் பிரசங்கத்தை நான் மறக்கவில்லை என்பதை அவருக்கு அறிவிக்கவே நான் ஆமைக்கு இப் பெய ரிட்டேன்) அழு த ப டி முட்டைகளிட்டுக் கொண்டிருந்தபோது நான் நன்கு கவனித்தேன். அது சுமார் ஆறு அடி நீளமும், ஒட்டுப் புறம் நான்கு அடி அகலமும் இருந்தது. அதன் மீது பெரிய பெரிய நத்தைக் கூடுகள் ஒட்டியிருந்தன. தண்ணீருக்கு அடியில் நெடுங்காலம் கிடந்த மரக்கட்டை மீது காணப்படுவது போல் அதன் மேலும் ஏகப்பட்ட பாசி பற்றியிருந்தது. அதற்கு எவ்வளவு வயது இருக்கும் என்று நான் தாத்தாவைக் கேட்டேன். அது தனக்குத் தெரியாது என்றும், ஆனல் கவனிக்கும் போது அந்த ஆமை பாட்டியைவிட மூத்ததாகவே தோன்றுகிறது என்றும் அவர் சொன் னுர், -

இறுதியாக அது தன் அலுவலே முடித்து, மண்ணேத் தள்ளுகிற புல்டோஸர் (Buildozer) போல் தன் துடுப்புகளை வீசி வீசிப் பள்ளத்தை மூடியது. பிறகு மண்ணே நன்கு மிதித்துச் சமப்படுத்தி விட்டு அது கடலை நோக்கிச் சென்றது. .

அதன் மேல் சவாரி போ, காளைமீது ஏறிக் கடலுள் சென்று அப்புறம் வீடு திரும்பாமலே போய்விட்ட புராண வீரன் மாதிரி நீயும் போ” என் ருர் தாத்தா. ?

நான் ஆமை சவாரி செய்தேன். அதன் முதுகின் மீது நான் ஏறிக்கொண்டேன். அது தள்ளாடித் தண்ணீரை அடைந்தது. அது நீந்தி ஆழத்தை நோக்கி முன்னேறும் வரை நான் அதன் முதுகிலேயே இருந்தேன். பிறகு கரை சேர்ந்தேன். நாங்கள் குழியைத் தோண்டி முட்டைகளை எண்ணிளுேம். 137 இருந்தன. பெரிய அக்ரோட் கொட்டை அளவு பெரிதாக இருந்த ஒவ்வொரு முட்டையிலும் ஒரே விதமான சிறு குழிவு காணப்பட்டது.

இரண்டு டஜன் முட்டைகளை நாம் எடுத்துக்கொள்வோம். மீதியை ஆமைகளாக மாற விட்டு விடுவோம். அந்த ஆமையின் உழைப்பைப் பயனற்றதாகும்படிச் செய்வது நமக்கே அவமான மாகும். இவைகளை நாளைக் காலை ஆகாரத்துக்கு உபயோகிப் போம். மற்றவை குட்டிகளாவதைக் காண இன்ஞெரு நாள் வருவோம். ஆனல் முட்டையிலிருந்து குட்டி ஆமை வெளிவர எத்தனை நாட்களாகும் என்பது எனக்குத் தெரியாது ‘ என்று தாத்தா கூறினர்.

நாங்கள் நிலவில் மெதுவாக வீடு நோக்கி நடந்தோம். என். குல்லாய் நிறையப் புது ஆமை முட்டைகள் இருந்தன. யாரும் பேசவேயில்லை. நாங்கள் படுக்கச் சென்றபோது அலைகளின் ஆரவாரமும், கடல் பறவைகளின் கூச்சலும் காதில் விழுந்து கொண்டிருந்தன. அம்புலி மிக உயரே வந்திருந்தது. நான் வீட்டி லேயே தங்கியிருந்து, சினிமாவுக்குப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியபடி தூக்கத்தில் ஆழ்ந்தேன். ஆயினும் அவ்வாறு செய்யாததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.