பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம்

நவம்பர் வாரங்களில் ஒரு வாரம். வானம் சிமின்ட் நிறத்தில் விளங்கியது. காற்று உடலில் குத்தித் துளைத்தது. தெற்குப் பிராந்தியத்தில் கூடக் காற்றாேடு பனியும் கலந்து வீசுவதுபோல் தோன்றும் காலம் அது. மேகங்கள் மிகவும் தாழ்ந்து தொங்கின. சாம்பல் திற நதி மேலும் கீழுமாகத் துள்ளிக் கொண்டிருந்தது. இரவு நேரச் சாப்பாட்டுக்குப் பிறகு தாத்தா தன் வாயுமானியைக் இவனித்தார். அதில் வீழ்ச்சி காணப்படுவதாகச் சொன்னர்.

“ உனக்கு வாத்துக்களைப் பற்றி அதிகம் தெரியாது என்றே தினக்கிறேன். நாளைப் பருவநிலை படுமோசமாக இருக்கும். ஆலங் கட்டி மழை பெய்யும். பனியும் சிறிது பெய்யலாம். வாடைக் காந்து கடுமையாக இருக்கும். ஆறு கொந்தளிக்கும். அப்பொழுது வாத்துக்கள் பறக்கும். தணிவாகவே பறக்கும். நாம் அதிகாலை யிலேயே எழுந்து செல்வோம். காடை வேட்டையில் நிபுணனாகி விட்ட உனக்கு வாத்துக்களைப் பற்றிக் கற்றுத் தருவேன் ‘ என்று தாத்தா சொன்னர்.

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் பதிலுக்குச் சிரித்தேன். முந்திய நாள் பிற்பகல் முதல் நான் கர்வத்தோடு விள்ங்கினேன். முதல் தடவையாக நான் அதிகப் பட்சம் காடைகளேச் சுட்டிருந்தேன். அன்று பறவைகள் நாய்களுக்கு வசமாய்ச் சிக்கும் குளிர் நாட்களில் ஒன்று. தனிப் பறவைகள் புல்லில் சிதறிச் சரியானபடி அகப்பட்டன. தாத்தா தந்த புதிய 15 கேஜ் இரட்டைத் துப்பாக்கியால் நான் அவசரப்படாது சுட்டேன். பறவைக் கூட்டத்தின் மீது இரு முறை வெடி தீர்த்தேன். ஒரே ஒரு தடவை தான் குறி தவறியது. நான் பதினேந்தாவது பறவையைச் சுட்டபோது, நாய்கள் கூட மகிழ் வுடன் காணப்பட்டன. எனினும் என்னளவுக்கு அவை ஆனந்தம் அடைந்ததாகத் தோன்றவில்லை.

காடை விஷயத்தைக் கற்று விட்டதால் வாத்துக்களுக்கும் அதே வகைதான் என்று எண்ணிவிடாதே. நான் முன்பே சொன்னது போல, காடை சுடுவது தன்னியக்கம் ஆகும். நிதான ஆரய்க் கணிப்பதற்கு அங்கு நேரமில்லை. ஆனல் வாத்துக்கள். விஷகம் கமனக் கணிப்புக் கலையாம் என்று தாத்தா சொன்னர். கமனக் கணிப்புக் கலை என்றால் என்ன?” என்று நான் கேட்டேன். w

தாத்தாவுக்குப் பெரிய பதங்கள் நிறையவே தெரியும். விளக்கம் கூருமலே அவற்றை அவர் என்னிடம் பிரயோகித்து