பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேர்னுர்க்

இவற்றை எல்லாம் சேகரித்து, காரில் கொண்டு போடு. நாம் இருவரும் தண்ணீரில் மூழ்கினலும் மூழ்கி விடலாம். பிறகுதான் இவள் வருத்தப்படுவாள் ‘ என்றார் தாத்தா. சிறு நஷ்டமே ‘ என்றாள் மிஸ் லாட்டி, தாத்தா பெருமூச்சு விட்டார். வாசல் வழியே வெளியேறிஞர். நான் காரில் ஏறும் சமயம். மிஸ் லாட்டி என்னைக் கூப்பிட்டாள், அவள் கைகளில் காகிதப் பை ஒன்று இருந்தது. உள்ளே அது கடினமாக இருந்தது. களகளவென ஒலி செய்தது,

அவர் தனது நரம்பு டானிக்கை மறந்து விட்டார். உன் ஸ்தானத்தில் நான் இருந்தால், வீட்டுக்குப் போவதற்கு முன்பு, முதலில் பாஸ் மீன்களைப் பிடிக்க முயல்வேன். அவை கவ்வ வரும் என்றே நினைக்கிறேன் என்னைப் பார்த்து கண் சிமிட்டினள் அவள். பூல் ரூம்களைவிட்டு விலகியே இரு என்றாள்.

நான் தாத்தாவிடம் அவருடைய நரம்பு டானிக்கைக் கொடுத்த போது, அவர் நெடு மூச்சு விட்டார். நான் சொன் னதன் பொருள் உனக்குப் புரிந்ததா ? அவர்களே முட்டாள்கள் ஆக்குவதற்கு ஒரு வழியுமில்லை. அவள் என்ன சொன்னுள் ?”

  • முதலில் மீன் பிடிக்கப் போங்கள் என்றாள் .’

அப்ப நாம் மீன் பிடிக்கப்போவோம். அவள் நேரடியாக முன்வந்து, அவளுக்கு மீன்கள் மீது அதிக ஆசை ஏற்பட்டுள்ளது என்று சொல்லியிருந்தால், நமக்கு எவ்வளவோ நேரம் மிச்சமாகி பிருக்கும் என்று தாத்தா சொன்ஞர்.

24 அதோ போகிறது!

முன்னுட்களில் போஜி மீன் பிடிப்புத் தொழில், ஒருவன் குறுக்கே ஒடுவதைப் போலவே, பிழைப்புக்கு வழி செய்யும் ஊக்க மளிக்கும் விஷயமாகும். கடலின்-அத்துடன், உலகத்தின்எல்லேயின்மை புற்றிய முதலாவது கூரிய உணர்வு எனக்கு ஏற் பட்டதே, போஜி பிடிக்கும் படகில் நானும் ஏறிச் செல்லும் அளவு பெரியவன் ஆகிவிட்டேன் என்று தாத்தா தீர்மானித்தபோது தான். போஜி என்பது மிக வழவழப்பான கொழுத்த மீன். அதன் உண்மையான பெயர் மென்ஹேடன். அது உரத்துக்கும், மீன் துரளுக்கும், இன்னும் பல வழிகளிலும் பயன்படும். போஜி மீனச் காப்பிடுவது தவிர வேறு என்ன வேண்டுமாயினும் செய்ய முடியும். உமக்குப் பசி அதிகமாகயிருந்து நீர் அதை உள்ளே தள்ளிவிட்ட்ால், அது உம்மைக் கொல்லாது என்றே நான் நீனேக்கிறேன்.