பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ போகிறது:

என் நகரத்தில் போஜி மீன் பிடிப்பு பெரிய தொழிலாக விளங் கியது. போஜிகள், இருல்கள், படகோட்டுவது முதலிய விவகாரங் களுக்கிடையே, நாங்கள் சாப்பிடவும் செய்தோம், வானெலா எனும் பெயருடைய போஜிப்படகு ஒன்று தாத்தாவிடம் இருந்தது. கடல் மேல் சென்ற கப்பல்களில் அது மிகப் பெரியது அல்ல என்றே நான் கருதுகிறேன், ஆளுல் எனக்கு அது க்வீன் மேரியை விடப் பெரியதுதான். கோடி மைல் நீளமுள்ளதுபோல் தோன்றிய கரை வலே, பல சிறு படகுகள், ஒரு தலைவன், ஒரு துணைவன், ஒரு விஞ்ச்மேன் , முரட்டு ஆட்கள் பலர்-அநேகமாக இவர்கள் நீக்ரோக்கள்தான்-ஒரு சிறுவன் ஆகியவர்களைத் தாங்கும் அளவுக்குப் பெரிதாகயிருந்தது அது.

போஜி மீன்கள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். கேனட், கல் முதலிய பறவைக் கூட்டங்கள் அவற்றைத் தொடர்ந்து போகும். அவை சூரிய ஒளியில் பித்தளைபோல் மின்னும். சுரு, டால்பின், மக்கரெல் போன்ற பெருமீன்கள் அவற்றினுள்டே பாய் வதையும், பறவைகள் கீழே பாய்ந்து, ஒரு மீனத் தங்கள் கால் நகங்களில் அல்லது அலகுகளில் பற்றுவதற்காக மூழ்குவதையும் நாம் காண முடியும்.

எனது வேலை உயரே காக்கைக் கூட்டில் இருந்தது. நான்தான் உற்று நோக்குவோன். தளங்களுக்கு மேலே உயர்ந்து நிற்கும் அஞ்சா நெஞ்சன். அங்கே எல்லையற்ற வாணவெளியில் தன்னந் தனியனுக இருந்து, எல்லேயிலாக் கடலே ஆராய்ந்தேன். அலே போல் எழுந்தும் விழுந்தும் வரும் கொழுத்த முதுகுடைய மென்ஹேடன் கூட்டங்களை நோக்கினேன். வலேயில் சிக்கி, பள பளப்பாய் துள்ளிக்குதிக்க, அவை படகினுள் இழுக்கப்படும். பிறகு சார்வி காளின் சுத்தம் செய்யும் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படும். பயங்கரமான நாற்றப் பொருளாக மாற்றப்படும். பன்றிக் கொழுப்பு, பீன்ஸ், நீக்ரோவர் வீடுகளில் நெடிய இனிமைகள், வெள்ளை இனத்தவர் வீடுகளின் பிரத்தியேகப் பாதை களில் சேரும் மட்டச் சரக்குகளின் மற்றுமோர் குவியல் என்பதை அந்த நாற்றம் உணர்த்தும்.

‘இது பெரிய தொழில். நீ ஒரு மீன்பிடிக்கும் படகின் காக்கைக் கூட்டில் உட்கார்ந்திருக்கும் வெறும் பையன் அல்ல. ஏகப்பட்ட மக்களின் வாழ்வில் உள்ள பொருளாதார பேதம் ஆவாய். போஜி மீன் கூட்டம் ஒன்றை, இதர கப்பல்களில் உள்ள பிற உற்றுநோக்கிகள் பார்ப்பதற்கு முந்தி நீ கவனித்தாக வேண்டும். அப்பதான் நாம் முதலில் அவற்றை அடைய முடியும். இல்லையேல் அடுத்த வருஷம் கிறிஸ்துமஸ் விழா கிடையாது. மோபி டிக்கைத் தேடி அலையும் கண்கள் பெற்ற காப்டன் ஆஹப் நீதான் என்று உன்னல் நடிக்க முடியாதா, பாரேன். பார்க்கப் போனல், போஜிகள் நிறையச் சேர்ந்தால் ஒரு திமிங்கலத்தின்