பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ போகிறது :

தடைகளில் அவற்றைப் பசுமையாக விற்று விடுவர். என் பங்கு: பணத்தை நானே வைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கும். அதை நான் எதில் செலவிட்டேன் என்ற கேள்வியே எழாது.

சூரியனும் கடல் அலைத்திவலைகளும் நிறைந்த பிரகாசமான டொன் நாட்கள் அவை. உப்பு நம் உதடுகளில் சொரசொரக்கும். வெயில் நம் சருமத்தில் உப்பைக் கணிய வைக்கும்போது மூக்கு எரியும். கவனிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன: பறவைகள் மீன்களைப் பற்றிய விதம் : சுரு மீன்களின் முதுகுப் புறம் நீரைக் கிழிக்கும் முறை : கப்பலின் முன் பக்கத்தோடு ட்ால்பின்கள் ஒட்டப் பந்தயம் நடத்துவது ; உல்லாசமும் தேசப் பண்பும் பெற்ற கடல் பன்றிகள் கப்பலைச் சுற்றி விளையாடுகையில் சடக்கெனத் திரும்பும், தோழைமை பெறுவதில் ஆனந்தம் அடை யும் பெரிய, கோமாளித்தன, மேல்மினுக்கிகள் இவை.

எப்பொழுதும் கவனிப்பதற்குப் பருவ நிலையும் உண்டு-பெருங் காற்று, புயல் அல்லது மிகவும் இழிவான குருவளித் தன்மையை வளர்த்து அது கையாளும் முறையைக் கவனிக்கலாம். என்னிடம் மெழுகுத் துணி உடையும், ஈரம் படிய முடியாத தொப்பியும், பூட்ஸும் இருந்தன. வானம் அழுக்காய் சாம்பல் நிறமாய் மாறு: வ்தையும், மேகங்கள் தணிவதையும், கடல் அலைகள் குவித் தெழுந்து நீர்த்திவலைகளின் பெரும் படலங்களைக் கப்பலுக்குள்ளே விட்டெறிவதையும் நான் நேசித்தேன். கடலில் புயல் எழும் நிலை யில் ஒருவித அற்புதம் என்றும் உண்டு. நம்மை மீண்டும் நெருப் போர்த்திற்கும் படுக்கைக்கும் பத்திரமாய் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை தலைவனிடம் இருந்தால் இதன் விசேஷம் மிகும். கப்பவில் உள்ள வாசனைகள் விசேஷமானவை-எண் ணெய், கீலெண்ணெய், சுத்தமான சணல், கித்தான், உப்பு, கொழுப்பு, எரிபொருள், வர்ணம் முதலியன. நான் முதன் முதலில் ஸஅஜி மூஜி பற்றி அறிந்து கொண்டது வானெலாவில் தான். அது வர்ண்ப் பூச்சுக்களைத் துடைப்பதற்குரிய கொடிய காரநீர்க் கலவையாகும் ; நம் தோலில் துளை உண்டாக்கக் கூடியது. பல வருஷங்களுக்குப் பிறகு நான் ஒரு வியாபாரக் கப்பலில் கடல் மீது சென்றபோது, முன்தள உச்சியில் அமர்ந்து கவனிப்பது, வர்ணத்துக்கு ஸுஜி உபயோகிப்பது பற்றி எல்லாம் எனக்கு மிகக் குறைவான போதனைகளே தேவைப்பட்டன.

நான் (மோபி டிக்கைத் தேடும் காப்டன் ஆஹப் ஆக இல்லாத போது சாதாரணத் தளத் தொழிலாளியே ஆகையால் தலைவ: ரோடு-அதாவது, அவரோடு-சேர்ந்து சாப்பிடலாம் என எதிர் பார்க்கக்கூடாது என்று தாத்தா சொன்னர், தலைவருக்கென்று விசேஷமான கெளரவம் உண்டு, அது எவ்வாறேனும் பாதுகாக்கப் படவேண்டும், தான் மட்டும் தனியாகச் சாப்பிட நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அவர் கூறினர். ஆகவே, நான் டாம், பீட்: இருவரோடும் சாப்பிட்டேன். நாங்கள் பன்றியை விட மிக அதிக