பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ போகிறது !

இரண்டு தூக்குக் கருவிகளையும் நிர்வகித்தேன். அதே சமயம், புராதன வானெஸ்ாவுக்கும், அதன் ஒத்துழைக்கும் குணம் பெற்ற மாலுமிகளுக்கும் நான் அபசாரம் கலந்த மரியாதை நிறைந்த நன்றி கூறிக் கொண்டிருந்தேன். -

நான் மிக உயர்வாக நினைக்க முடிவது இதுதான்; உதயத் துக்கு முந்திய பிரயாணத்தில் நிலவிய பேய்த்தனக் குளிர், தார்ப் பாய்கள் மீது படிந்த பிசுபிசுப்பான பனி, சனல் கயிறுகள் மேல் விறைப்பாய் குத்திட்டு நிற்கும் பணி, தளத்தில் குளிர்ச்சிப் புள்ளி களாய் விளங்கும், பாலத்தின் கண்ணுடிக்குக் குறுக்கே கறை பூசி யிருக்கும். கப்பலோடு கடல் மோதுவதும், உறுதியாகக் கட்டப் படாத எதுவும் கடல் கொந்தளிக்கும்போது உலாக் கிளம்பிவிடு வதும், பெரிய அலை ஒன்று சாடும்பொழுது கப்பல் அதிர்ந்து நடுங்குவதும், கப்பல் சமையலறையில் எழும் ஒசையும், சமையல் காரனின் ஏச்சும், சமையலறை அடுப்பில் காப்பிச் சட்டி கவிழ்ந்த தால் தீயில் கொட்டிய காப்பிப்பொடி கருகும் மனமும் எனக்கு ஞாபகம் வருகிறது.

சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், இரவின் குளிர் மீண்டும் வரும் சமயத்தில், நமது கொடிகள் நன்கு பறக்க, நாம் துணிகர மாகத் துறைக்குள் வந்ததும், அந்த நாளின் முடிவில் எலும்பை நொறுக்கும் களைப்பு இருந்ததை நான் நினைவுகூர்கிறேன்._நாம் கட்டியபோது துறை ஆடி அசைந்த விதமும், கடலில் நனந்த கால்கள் உறுதியான பல்கைகளை மறுபடியும் மிதித்த வகையும், அந்நிலையில் கூட கடவின் அசைவுக்கு ஏற்ப உருண்டு ஆடியதும் நினைவில் எழுகின்றன.

தி ஏன்ஷியன்ட் மேரினர் கவிதையைப் படிக்கும் முன்னரே நான் அல்பட்ராஸ் பறவையைப் பார்த்தேன். அதுமட்டுமல்ல; அப் பெயர் பெற்ற ஒரு படகையும் அறிவேன். குன்றுகளிலிருந்து வீடு திரும்பும் வேட்டைக்காரன் பற்றியும், கடலிலிருந்து வீடு திரும்பும் மாலுமி பற்றியும் நான் அறிவேன். -

ஒரு நாள் நான் சக்கரத்தைக் கையாளும்போது, தாத்தா சொன்னர் : “என் வாழ்வில் பெரும் பகுதியை நான் கடலில் கழித்தேன். உன் பெரியப்ப்ா ஜேக், ப்ெரியப்பா டாமி, பெரியப்பா வாக்கர், இன்னும் எங்களுக்கு முந்திய எல்லோரும் அப்படியே செய்தார்கள். கடலுக்குப் ப்ோகும் நேர் வாரிசாக நாங்கள் உன் னைப் பெற்றிருக்கிருேம்.’’ -

ஒரு சமயம், ஒர்னுக்குக் கிழக்கே எங்கோ ஓரிடத்தில் இரண் டாவது உலக யுத்தம் என்று அன்ழக்கப்பட்ட மகிழ்வற்ற நிகழ்ச்சி யின்போது, அவர் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன் ; எங்கள் குடும்பத்தில் இன்னும் சிறிது அதிகம்ான போர் வீரர்கள் இருந் திருக்கலாமே என்று ஆசைப்பட்டேன்.