பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறுப் பள்ளி-இடுகாடு

டிருந்தது. ’’ - -

தாத்தா சீட்டி அடித்தார். நல்லது. நாசமாய்ப் போச்சு ’ என்றார். தன் குழாயைப் பற்ற வைத்தார். தொடர்ந்து சொல்லு. : 5 - -

“ நான் ஞாயிறுப் பள்ளிக்கூடம் போல் தொனிக்க விரும்ப வில்லை. ஆளுல்-’’

  • நீ ஞாயிற்றுப் பள்ளி மாதிரி என்றுமே தொனிக்க முடியாது. அதற்குப் போதுமான நேரத்தை நீ அதில் செலவிடவில்லை. நீ தொடர்ந்து பேசும் முன், பையன்களைப் பற்றி நான் கற்ற ஒரு விஷயத்தை உனக்குச் சொல்கிறேன். அதன் புதைபொருள் முக்கியத்துவம் கருதி இடுகாட்டுக்குப் போவதற்காக ஞாயிறுப் பள்ளிக்கு மட்டம் போடுகிறேன் என்று சொல்லும் ஒரு பையன், என்றுமே குணப்படுத்த முடியாத பொய்யனுக வளருவான்; அல்லது தீர்க்க தரிசனம் பெற்றுப் பெரியவனுவான். சரி, சொல்லு. ’’ -

அது இனிமையான நாள். நான் இடுகாடுகளை விரும்பு கிறேன். ஞாயிறுப் பள்ளியைவிட அதிகமாகத்தான். அவை: அதிக உற்சாகம் தருபவை. ஆல்ை நீ இன்னும் கவனித்துக்கேட்க விரும்பினல், நான் சொல்வதற்கிருந்தது இதுதான் :

வேறொருவன் நாயைப் பார்த்து ஒருபோதும் கத்தக் கூடாது என்று நீ எனக்குக் கற்பித்தாய். சுயநலத்தோடு ஒரு பறவையைச் சுடக் கூடாது என்று கற்பித்தாய். தானும் ஒரு மனிதன்தான் என்று நினைக்காதவன் எவனுமில்லை என்று கற்துத் தந்தாய். முக்கியமாக, பிளாரன்ஸ் அத்தை, ஹென்ரிக்ஸ். ஆல்பர்ட் கிரே, மேரி மில்லட், ஏப்னர் மக்காய் போன்ற நீக்ரோ மக்களைப் பற்றியே எண்ணுகிறேன். தங்கள் காடைகளைச் சுடுவ தற்கு நம்மை அனுமதித்ததோடு, அவர்கள் வீட்டுப்பக்கத்தில் நாம் திரியும்போது நம்மிடம் அன்பு காட்டிஞர்களே, அவர்களைப் பற்றித்தான். ஆமய்யா , தயவு செய்து’ , ‘ நன்றி அம்மா என்று கூறுவது, தொப்பியை அகற்றித் தலைவணங்குவது, காலப் பின்னுக்கிழுப்பது, சாப்பாட்டு மேஜையில் குழந்தைகள் காணப் படவேண்டுமே தவிரக் கேட்கப்படுதல் கூடாது போன்ற விஷயங் களைப் பற்றி நான் பேசவில்லை. எவரிடமும்-மட்ட நாய், அன் றொரு நாள் துறையில் வைத்து தாடையில் ஓங்கிக் குத்திக் கீழே தள்ளிஞயே ஊறுகாய்ப் படகு வில்லி, அவர்களிடம் கூட-நீ கேவலமாக ஒருபோதும் நடந்ததில்லை என்பதையே குறிப்பிடு கிறேன்.” -

தாத்தா மெதுவாக முணுமுணுத்தார் : அது ஒருவித விசேஷமான நாள். ஒருவன் தனது கோபத்தை மிஞ்சவிடக் கூடாது. ஆனல், நான் அவினே அதே துறையிலிருந்து மறுபடி யும் குத்தித் தள்ளுவேன், மன்னிக்கவும், மேலும் தள்ளுவேன்.”

ஒவ்வொன்றும் நன்னயத்தைத்தான் அடிப்படையாகக்கொண்