பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை மசியல்

அவற்றைச் சுட்டார்கள். இருபத்தஞ்சு சத ஒட்டல் சாப்பாட்டில் காட்டு வாத்து நிரந்தர இடம் பெற்றிருந்தது. ஆணுல், நான் வசித்த எந்தப் பகுதியைக் காட்டிலும், பால்டிமோர் வட் த் தில் உள்ளவர்கள் சிற்ப்புடன் சாப்பிட்டார்கள். அதில் பெரும் பகுதி ஜெர்மன் ஆகும். ஜெர்மானியர் தங்கள் வயிற்றிடம் வலிக ம்ோகம் கொண்டிருந்தனர்.” -

  • நீங்கள் ஆமையை எப்படிச் சமையல் செய்தீர்கள் :

எத்தனையோ வழிகள் இருந்தன. ஆளுல், இன்னும் நான் மேரிலேண்ட் முறையையே உயர்வாக விரும்புகிறேன். உன்னிடம் முதிர்ந்த ஆமைகள் இரண்டு இருப்பதாக-அவற்றை வருக்கும் சக்தி உனக்கு உண்டு என்று-வைத்துக் கொள்வோம். அப்போது, ஏறக்குறைய ஒரு பைன்ட் இறைச்சி உனக்குக் கிடைக்கும். ஒரு ராத்தல் வெண்ணெயையும் இரண்டு பைன்ட் ஜெர்வி க்ரீமையும் அதில் சேரு. பெரிய ஜாடி நிறைய ஷெரி எடுத்து அதில் கொட்டு. பக்குவம் பண்ணு, கொதிநிலைக்குக் கொண்டு வா-புைகா, அதல்லவா துவட்டல் வெறுமனே அதை நினைத்தாலே வாதத் பெற்ற என் காலிலே வலி எடுக்கிறதே. கடல் ஆமை சூப்பு. பதார்த்தம் என்று பலரும் பேசுகிறார்கள். நறுமணத்துக்கும் ஊட் உத்துக்கும் சதுப்பு ஆமையை மிஞ்சக்கூடியதை எவரும், என்றுமே தொட்டதில்லை.”

முன்னுளில் அவற்றை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? இப்போது நான் சிலவற்றைப் பிடிக்க முடியும் அல்லவா ?” என்று கேட்டேன், -

இங்கே முடியாது என்றே நான் நினைக்கிறேன். அவை வேறெங்கோ போய்விட்டதாகத் தோன்றுகிறது. ஆணுல், மூத் காலத்தில் அவர்கள் சின்னஞ்சிறு நாய்கள் வைத்திருத்தார்கள். ஆமை வேட்டைநாய்கள் என அவற்றை அழைத்தார்கள். ஆமைகளை மாரிக்காலத்தில் தான் வேட்டையாடுவர். ஏனென்றால், மைகள், குளிர் காலத்தைக் குகைக்குள் துரங்கிக் கழிக்கும் கரடி மாதிரி, சேற்றில் வளே தோண்டி அதனுள் செயல்ற்றிருக்கும். காற்று நுழைவதற்காக அவை சகதியில் சிறு துவாரம் அமைத் திருக்கும். நாய்கள் அதைக் கண்டு கொள்ளும். ஒரு நல்ல பறவை நாய் எத்தனை தடவைகள் தவறுதலாக, சேற்றில் புதைந்த ஆமையை அல்லது பாம்பைக் குறிவைத்துக் காட்டியது என்பதை நீ நினைவு கூர்ந்தால், இது ஆச்சர்யமாக இராது. அவை ஒரு வித மான பூசணம்பிடித்த நாற்றம் பெற்றிருக்கும் உடனே நீக்ரோக் கள் அவற்றைத் தோண்டி எடுத்து விற்று விடுவார்கள். நான் சிறுவனக இருந்தபோது, அடிமை நாட்களில், அடிமைகளுக்கு ஆமை உண்வு கொடுத்து வந்தனர் என்ற ஞாபகம் எனக்கு இருக்கிறது. ஏனெனில், ஆமைகள் இனவிருத்திக்கு ஊக்கம் அளிக்கின்றன என்றாெரு மூட நம்பிக்கை நிலவுகிறது. அதில் உண்மை இருக்கிறதா என்று என்னல் சொல்லமுடியாது. ‘