பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் 27

மேல் சட்டையின் மயிர்கள் மீது அவை பனித் துளிகள் போல் தேங்கி நின்றன. ஆயினும் தாத்தா சொன்னது போல, காலே உணவுக்குப் பிறகு எனக்குள்ளே கதகதப்பாகத்தானிருந்தது.

தாத்தா தோள்களைத் தள்ளித் துடுப்புகள் மீது குனியும் போது, அவர் கழுத்தின் பின்புறத்தை நான் பார்த்தேன். அவர் தலையின் பக்கத்தில் வெளியே நீண்டிருந்த காதுகளையும், வாயின் ஒரத்திலிருந்த குழாயையும், காலேக் காற்றில் ஆடிய மீசை நுனி களையும் நான் காண முடிந்தது. அவர் சுமார் இரண்டு மைல் துாரம் ஒட்டிய பிறகு, சகதியும் புல்லுமாயிருந்த மூலையைச் சுற்றிப் படகைத் தள்ளிஞர். துடுப்புகளுக்கு ஒய்வு கொடுத்தார். அவற்றைப் படகில் போட்டுவிட்டு எழுந்து நின்றவாறே அவர் சொன்னர், தள்ளு கம்பை என்னிடம் தா’ என்று.

உந்துகோலை நான் அவரிடம் கொடுத்தேன் நான் கத்தி யால் வெட்டிய கம்புகளில் எல்லாம் முரடானது அது. அதைச் செம்மைப்படுத்துவதில் தாத்தாவுக்கு நானும் உதவி புரிந்தது உண்டு. அது வளையும் தன்மை பெற்றது. அதை அரைவட்ட வடிவமாக வளேக்கும் அளவுக்கு நீர் பலசாலியாக இருந்தாலும் கூட, அக் கம்பை ஒடிக்கமுடியாது. அதன் முண்டுகள் கூடக் கண்ணுடிபோல் மழ மழப்புற்று, ஒரு சிராய்கூடக் கைக்குத் தட்டுப்படாதபடி நாங்கள் மணலால் தேய்த்திருந்தோம்.

தாத்தா என்னை நோக்கியபடி படகின் பின்புறத்தில் நின்றார். சிறிய, ஆழமில்லாத, நல்ல தண்ணிர்க் குளம் ஒன்றை அடையும் வரை அவர் படகைத் தள்ளினர். மடுவின் மேல்பரப்பில் குவளைக் கொத்துக்கள் மிதந்தன. கருஞ் சேறு படிந்த அடிமட்டத்தில் விசித்திரப் பாம்புகள் போல் தோன்றும் தண்டுகள் வேர் விட் டிருந்தன. உந்துகோல் அங்கு பதிந்து நீரைக் கலக்கி, சகதிச் சுழல்களைக் கிளப்பியது. படகு நீர் மேல் குமிழியிட்டு மிதப்பது போலிருந்தது. அதற்குத் தட்டையான அடிப்பகுதி இருந்ததால், அது வேகமாய் ஒடவில்லை. வெறுமென வழுக்கிச் சென்றது. நாங்கள் குளம் முழுவதையும் குறுக்கே கடந்து, ஐந்தாறு அடி உயரம் புல் வளர்ந்து நின்ற சிறு நிலப்பகுதியை அட்ைந்தோம்.

எந்த இடத்தையும் போல் இதுவும் நல்லது தான்’ என்று தாத்தா சொன்னர்,

அவர் தன் பெரிய பூட்ஸை உயர இழுத்து, பெல்ட்டுடன் கயிற்றால் இணைத்துக்கொண்டு வெளியேறினர். பாதங்களை இறுக்கி, என்னையும் சேர்த்தபடி படகைப் புல்பரப்பினுாடு தள்ளி ஞர். முடிவில் புல் படகின் முன்புறத்தை அமுக்கிவிட்ட்து. அவர் துடுப்பின் துணையோடு படகின் பின்பக்கத்தை உள்ளே தள்ளிஞர். புல்லிதழ்கள் சேற்றினுள் ஆழ அமுங்கின. ஏய்ப்பு (decoys)களை என்னிடம் வீசு என்றார் அவர். -

நான் ஏய்ப்புகளை அவரிடம் எறிந்தேன். எங்களிடம் ஒரு டஜனுக்கு அதிகமில்லை அவை. தாத்தா வீட்டின் பின்பக்கத்துப்