பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் டேரலும் கிடப்பட்ட மகோகனி மரத்தாலானவை. இதர நாற்காலிகள் எல்லாம் தோலால் ஆனவை. ஆழமாய், ஸ்பிரிங் ஆசனமும் அகன்ற கைகளும் பெற்ற ஒளிச் சேர்களும் பெரிய சோபாக்குளு ம்ாகும். சில மரூன் நிறம், சில இருண்ட காட்டுப் பச்சை, சில் நல்ல கறுப்பு. - -

அவ் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் - கனமான, தேய்வுற்ற, வெள்ளிப் பர்த்திரங்கள், புராதன வெட்ஜ்வுட் தட்டுகள், பூட்ஸ், சேணம், துப்பாக்கி, புத்தகங்கள் எல்லாம், முக்கியமாகப் புத்தகங்கள்-தலைமுறை தலைமுறையாக அன்போடு கையாளப்பட்டு வந்தன, கை பட்டுப் பட்டு மெருகேருத புத்த கம்-அது கணக்குப் புத்தகம், ஊய்டாவின் நாவல்கள், * கரும் அழகி , டிக்கன்ஸ் நாவல்கள் எதுவே ஆயினும் - ஒன்றுகூட சுவரோரத்தில் இல்லை. . - -

ஒவ்வொரு அறையின் நடுவிலும் நெருப்பிடம் ஒன்று உண்டு. இநட்டையான மனிதன் அதனுள் நிற்கமுடியும். - பென்னம் பெரிய இரும்புப் பகுதிகள், கணப்புகள், பெரிய கெட்டில்கள் அமர்வதற்கேற்ற குமிழ்கள் எல்லாம் அதில் இருந்தன. மாடியில் நான் பார்த்த ஒவ்வொரு படுக்கையும் நான்கு பேர் படுக்கும் அளவு பெரியது. ஒவ்வொரு அறையிலும் -குளிக்குமிடத்தில் கூட-ஒரு கணப்பு இருந்தது. குளிக்கும் தொட்டி மிகவும் பெரியது. பீங்கானில் செய்யப்பட்டதை, சவப்பெட்டியில் அடக்கம் பண்ணுவதுபோல், பெரிய வால்நட் மரத் தொட்டிக்குள் பதித்திருந்தார்கள். இதர சுகாதார வசதிகளும் அவ்வாறே ஆழைத்திருந்தன. அவற்றின் அடிப்பக்கம் அகற்றக்கூடிய முறை யில் இருந்தது. . . . . .

வெளியே, அது இலையுதிர் காலமே ஆயினும், புஷ்பப் பரப்பு ஆறு ஏக்கர் இருந்ததுபோல் தோன்றியது. பச்சைப் புல்வெளி, கண் எட்டும் மட்டில் பரந்து, தூரத்து நீலமலைத்தொடருடன் இணைந்தது. மேய்ச்சல் தரை, புல்வயல் ஆகியவற்றினுண்டே ரோடைகள் ஓடின. பசிய கிளாவர் புல்வயல்களிடையே வெள்ளி இழைகளென அவை நெளிந்தன. ஆங்காங்கே மரத்தோப்புகள் ைடுப்பாக விளங்கின. - - - * தொழுவங்கள் உல்லாச வேட்டை அங்கியின் செந்நிறம் பெற்றவை. ஒவ்வொரு வேலியும் வெண்மையாய் மின்னியது ; நாய்ப்பல் போல் சுத்தமாக இருந்தது. பறவைகளுக்காக மட்டும் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. கோழிகளுக்காக ஒன்று, பெஸண்டுகளுக்கு ஒன்று, வான்கோழிகளுக்கு ஒன்று, வர்த்துக் களுக்கு ஒன்று, கினிக்கோழிக்கு ஒன்று எனச் சிறுசிறு புல்வயல் களாக அது பகுக்கப்பட்டிருந்தது. கறுப்பும் வெளுப்புமான் பெரிய ஹோல்ஸ்டீன் ப்சிக்க்ளும், தங்கள் பாலேட்டைப் போலவே நிறம் பெற்றிருந்த ஜெர்ஸிப் பசுக்களும் பால்பசு வெளி யில் நின்றன. சவாரிக் குதிரைகளும் கட்டுண்டிருந்தன. பதிறுை