பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஆளிக்கின்றன. மேலும் இதுபோன்ற வேலை அதிகநேரத்துக்கு வழி செய்கிறது” என்று கூறுவது போல.

நாங்கள் பூரணமாக ஒரு நாளை அனுபவித்தோம். நான் சில வற்றை அடித்தேன்; சிலவற்றைத் தவற விட்டேன். முடிவில் ஆறு ஆண் பறவைகள் சேர்ந்திருந்தன. ஆறு பெஸண்டுகள், மேரி லேண்டில் உள்ள மிக அழகான வீட்டுக்கு வேர்த்துக்கொண்டே திரும்பும் ஒரு சிறுவனுக்கு மளுேகரமான சுமையாகவே இருந்தன. என் துப்பாக்கியை தாத்தா எடுத்து வந்தார். பறவைகளை நான் தான் சுமப்பேன் என்று அடம் பிடித்தேன். என் முதுகு வலிக்கத் தொடங்கியதும், இவ்வளவு பெரிதான ஒன்றைத் தப்பவிடுவது எவ்வாறு சாத்தியமாயிற்று என நான் அதிசயிக்கலானேன். பல வருஷகாலமாக நான் அதிசயித்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அது சாத்தியமாகவே உள்ளது.

இதன்பிறகு, நாட்கள் அதி விசேஷத் தன்மை பெற்ற, சூரியன் மிகப் பிரகாசமாக விளங்கிய, மென் காற்று புத்துணர்வு தந்த, நாய்களும் பறவைகளும் இன்புறுத்த வேண்டும் என்ற ஒத்த நோக் குடன் செயல் புரிந்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. ஆளுல் அந் நாட்களே, தாத்தாவிடமிருந்து நான் பெற்ற மென்மை யான, ஆனந்தமான துக்கத்தையும், சின்ன வயது முதல் தான் கண்காணித்து வளர்த்த ஒரு குழந்தையோடும். தனது சிறந்த, மிகவும் நம்பிக்கைவாய்ந்த, நண்பரோடும் அவர் ஈடுபட்ட கடைசி பெஸண்ட் வேட்டையையும் அளித்த தினத்துடன் குழப்ப முடியாது.

நடைபெறக் கூடிய விபத்தை அறிய இயலாத குழந்தையின் வழக்கமான உணர்வின்மை எனக்கும் இருந்ததாக நான் நினைக் கிறேன். ஆளுல், தனது கடைசி ஆமைத் துவட்டலையும், இறுதிக் கித்தான் முதுகனையும் தான் சாப்பிட்டு முடித்ததாகவும், தன்து இறுதி பெஸண்டைப் பார்த்து விட்டதாகவும் தாத்தா அறிந்தார். என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது. இது அசட்டுத்தன்மாக ஒலிக்கலும் ஆல்ை அதைச் சற்று வாடித் தொங்கிய அவரது மீசையிலேயே நாம் கண்டிருக்க முடியும். - . . . . . . “

நாங்கள் மூன்று பெரிய மனிதர்கள், பெஸண்ட் பறவை. களோடு ஒன்றாக வீடு சென்றாேம். நான் அவற்றைச் சுத்தப்படுத் தினேன். ஒரு பறவையிடமிருந்து அவ்வளவு அழகையும் உரித் தெடுப்பது பரிதாபத்துக்குரியது தான். நான் ஒரு நரம்ாமிச பட்சணி போன்ற உணர்வு பெறலானேன். அப்ப்ோது மிஸ்டர் ஹோவார்ட், அவை அழுகிப்போகிற வரை அவற்றைத் தொங் கப் போடும் விவகாரம் ஒழியட்டும். இன்றிரவே நாம் இரண்ன்ட்த் தின்போம். அவை கொஞ்சம் கடினம்ாக இருக்கலாம். ஆளுல், ஜெல்லி, ஒயின், பன்றி இறைச்சித் துண்டுகள் எல்லாம் அத. னுடைய கடுமையை மாற்றிவிடும்’ என்றார்,

நாங்கள். திரும்பியபோது, தீ மூட்டப்பெற்றிருந்தது ; கல்.