பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துப் பதிப்பகத்தின் முத்தன்ன நூற்கள்

  • புத்தம் புதிய கலைகள்-பஞ்சப்

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவதில்லை-அதைச் சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லே மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்-ஹா ! இந்த வசையெனக் கெய்திட லாமோ சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். ‘ என்று மகா கவி பாரதியார் மூலம் தமிழன்னை நம்மைக் கேட் கிருள். இத் தமிழன்னையின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ் வளர்ந்து வளம்பெறப் பாரதியாரும்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் ‘ என் உத்தர விட்டுள்ளார். இவ்வுத்தரவைத் தலைமேற்கொண்டு முத்துப் பதிப்டகத்தார் (Pearl Publications) உலக நூல்களைத் தமிழாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்கள் யாவரும் இம்முயற்சியை வரவேற்பார்களென்பதில்,சந்தேகமில்லை.

அடுத்தபடி பாரதியாரே,

  • இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில்

இயற்றல் வேண்டும் ” என்று கூறுகிரு.ர். இவ்வாருன புது நூல்களை வெளியிடுவதற்கு முன்னணியாக இப்பதிப்பகத்தார் இப்போது மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகின்றனர். இவைகளிலிருந்து உலக மேதைகளின் உயர்ந்த கருத்துக்களை யெல்லாம் தமிழ் மொழியில் ஒருங்கே காணலாம்.

முத்து முத்தான கருத்துக்கள், முத்து முத்தான கற்பனைகள், முத்து முத்தான வார்த்தைகள், முத்து முத்தான வளமைகள்.