பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் 33

தனிந்து கிளுகிளுத்தபடி பறந்து செல்லும்போது கீச்சுக்குரல் கேட்டது. சதுப்பு நிலத்திலுள்ள சேற்றுவளையில் தான் உண்ணும் இடத்திலிருந்தபடியே பெட்டை மல்லார்ட் (Mallard) வாத்து ஒன்று, பறந்து செல்லும் கூட்டத்தை வம்புக்கிழுத்தது. உயரே வானில் பறந்தவாறே ஆண் வாத்து ஒன்று பதில் கூறிச் சென்றது. இப்பொழுது எங்களைச் சுற்றிலும் இறக்கைகளின் வேகத் துடிப்பு மட்டுமே நிலவியது. அவ்வப்போது, ஒளி நிறைந்த வானிலே கறுப்பு ஒன்று சிறியதாய்ப் பளிச்சிட்ட்தைக் கான முடிந்தது. .

தண்ணீர் ஆழமற்றுக் கிடந்த குட்டைகளில் யந்திரப்படகுகள் போல் மல்லார்ட் வாத்துக்கள் உட்காரத் தொடங்கவும், சதுப்பு நிலத்திலேகூட நீர் தெறிப்பதைக் கேட்க முடிந்தது.

‘” இன்னும் எவ்வளவு நேரம்- என்று நான் பேசத் தொடங் கவும், தாத்தா என் வாயை அடக்கினர்.

வாத்து வேட்டையின்போது அதிகம் பேசலாகாது என்பதை இப்போதே கற்றுக்கொள்வது நன்று, என்று அவர் கூறிஞர். ‘அதல்ை எதுவும் பின்னப்பட்டு விடாதுதான். ஆனல் அது உன் கவனத்தைக் கலைத்துவிடும். வாத்து வேட்டையில் பெரும்பகுதி விழிப்புடன் கவனிப்பதுதான். இஷ்ஷ். சூரியன் கொஞ்சம் மேலெழத் தொடங்கிவிட்டது. சீக்கிரமே ஒளியை அள்ளி வீசும் அது. நீ சுடும் பொழுது, உன் முறையையே பின்பற்று.”

உதயமாவதற்குச் சற்று முன்பு, வாத்து வேட்டைக்காகக் காத்திருக்கையில், காலம் மெல்ல ஊர்கிறது எனும் உணர்வைத் தவிர ஏனைய அனைத்தையும் மறக்கச் செய்யும் எதுவோ ஒன்று உண்டு, என்றே தோன்றுகிறது. சுடுவதற்குப் போதுமான வெளிச்சம் ஒருபோதும் வராது என்றே நான் நினைத்தேன். வானம் முழுவதும் ஓசை நிறைந்து நின்றது. வாத்துக்களின் நீண்ட வரிசைகள் பார்வையில் பட்டன. அவை உயரத்தில் பறப்பது போல் தோன்றின. ஆயினும் அவை வெகு உயரத்தில் பறக்கவில்லை. ஏனெனில் அவற்றின் சிற்குகள் எழுப்பிய மெல்லொலியை நன்கு கேட்க முடிந்தது. நீர்ப்பரப்பில் ஏய்ப்புகள் இடித்தும் ஆடியும், தண்ணில் சிறுசிறு ஒசைகள் எழுப்பியும் கிடந்தன. ஒன்று தலை கீழாக நிற்பதுப்ோல் காட்சி தந்தது. மற்றாென்று இறக்கையின் அடியில் பார்த்துக்கொண்டிருந்தது. அரைகுறை வெளிச்சத்தில் அவை அசல் வாத்துக்கள்போலவே தென்பட்டன. நான் ஒரு வாத்தாக இருப்பின், அவையும் வாத்துக்களே என்று தான் நினைப்பேன் என் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்,

குளிரை நான் மறந்தேன். எனது துவாரத்தின் வழியே நோக்கி வாத்துக்களைக் காண் முயன்றேன். சதுப்புநிலம் எங்கும், செஞ்சிறகு பெற்ற கரும் பறவைகள் பாடத் தொடங்கின: நாரைகள் கத்தின. சதுப்புக் கோழிகள் கிலுகிலுத்தன. தடித் தவளைகள் முறுமுறுத்தன. நெடுகிலும் வாத்துக்கள் இரைச்ச