பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

று கீழிற்ங்கியது; தண்ணீர் மீது தணிந்து ச் செல்வதற்காக. பின் மறைந்தே போயிற்று. ந்த லேசான வெளிச்சம் வந்துவிட்டது, பழுப்பு அடிவானத்தில் இளஞ் சிவப்பு மேலும் அதிகமாகத்

லிட்டன. எங்களுக்கு முன்னல் இஸ் ஒலி எழுந்தது. டில்

ற்கேற்ற எதைக் கண்டாலும் இப்போது நீ சுடலாம்’ என்று தாத்தா சொன்னர். - - &

நான் எனது 18 கேஜ் துப்பாக்கியைக் கெட்டித்தேன். அதன் முனையைத் தாத்தாவிடமிருந்து தள்ளிவைத்தேன். படகின் பின்பகுதிக்கு மேலாக அதன் குழலை வைத்துக் குறிபார்த்தேன். மேகங்கள் முன்னிலும் அதிகமாகத் தணிந்திருந்தன. வாத்துக் களின் வரிசைகளும், அவற்றின் சிறகடிப்பு மிகத் தெளிவாய் காதில் விழும் அளவுக்குத் தாழ்ந்து பறந்தன. ஒரு கூட்டம் எங்கள் தல்ைக்கு மேலே பறந்து போனபோது, வெண்மையான அடிவயிறுகளில் ஒளி மினுமினுத்ததைக் காண முடிந்தது._ _

  • ஊசிவால்கள். பெரியவை ‘’ என்றார் தாத்தா. விரைவில் அவர் என்ன அடைந்து, முடிச்சு விழுந்த பெரிய கையால் என் தோனே இறுகப் பற்றினர். தலையை அசைத்து, வெகுநேராக நோக்கிஞர். மல்லார்ட் வாத்துக்கள். இந்தப் பக்கமாக வருகின்றன என்றார், .

தான் உற்று உற்றுப் பார்த்தேன். என்.தயும் காண இயல வில்லை. ஆயினும் சில கணங்களில் புள்ளிகளின் வரிசை ஒன்றை நான் கண்டு கொண்டேன். அவை என்ன, எவ்வழி அவை வருகின்றன என்பதை அவர் எப்படி அறிந்தார் என்று என்னல் சொல்லமுடியாது. ஆளுல் அவை பெரிதாகிக் கொண்டிருந்தன. அவை அருகே, நெருங்கி வந்தன. நான் விறைப்புடன், என் துப்பாக்கின்யப் பாதி உயர்த்தினேன். அவை எங்களைச் சுற்றி வந்து இடப்புறம் சென்ற சமயத்தில், தாத்தா சொன்னர், “ வேண்டாம், அவை திரும்பி வரும் என்று. மல்லார்டுகள் புழக்கடைச் சேற்றில் செய்வது போலவே அவரும் களகளவென் றும் கிளுகிளு என்றும் ஒலிபரப்பினுர். பிறகு அவர் வலப்புறம் தலையசைத்தார். பறவைகள் போவதை நான் கண்டேன். இப்போது அவர், தனது உயிரே அதில்தான் ஒட்டிக்கொண்டிருப் பதுபோல், மும்முரமாக அலப்பத் தொடங்கினர். வாயில் குழாயை வைத்தபடியே, கக்-கேக்-கக்கின்-கர்கிள்-கேக் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பறவைகள் சுழன்று எங்களை நோக்கி வேகமாக வந்தன. ! இருபது இருந்தன. பெரிய பச்சைத் தலையன் ஒன்று முன்னே வந்தது. அவை சிறகுகளை நிலையாக வைத்து, வேகத் துக்குத் தடையிட்டு, தண்ணீர் மேலே தணிந்து பறந்து வந்தன. ஏய்ப்புகளின் வெளிப்புறமாகத் தங்கள் பாதங்களைப் பரப்பின.