பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தாத்தாவும் பேரனும்

முடியுமோ அவ்வளவுக்கு துப்பாக்கியை முன்னிழுத்து, குறி வைத் துச் சுட்டேன். அதுவும் விழுந்தது கீழே மற்றுமோர் மூட்டை போல. நீலச் சிறகும், மஞ்சள் அலகும், மஞ்சள் பாதங்களும், சுருண்ட வாலும், பெரும் பச்சைத் தலையும் பெற்ற ஆண் மல்லார்டுகள் இரண்டு திடீரென்று மடுவில் மிதந்தன, அடி வயிற்றை மேல்ே காட்டியவாறு அவையும் எனக்கே சொந்தம்.

எளிதுதான். இல்லையா ? அதாவது எப்படி என்பதை நீ புத்து கொண்டால்தான் ‘ என்று தாத்தா சொன்னர்,

  • அது வெகு சுலபம் என்றே எண்ணுகிறேன். நீ சொல்கிற முறையின் மூலம் அதை மிகவும் எளிதாக்குகிறாய் ‘ என்று நான் அதை ஒப்புக்கொண்டேன்.

“ நான் நீயாக இருந்தால் அதற்காக அதிகம் கர்வப்பட மாட்டேன். படகில் மூன்று வாத்துக்கள் உள்ளன. அவை நல்ல பெரிய வாத்துக்கள் என்பதற்காக மட்டும் நான் கர்வம் கொள்ளேன். என்னைப் போல் கிழவளுவதற்குள், நீ ஏகப்பட்ட வாத்துக்களைத் தப்பவிடுவாய். இன்று கூட சில வாத்துக்களைத் தப்ப விடலாம் ” என்று எச்சரித்தார். X

அவர் சொன்னது சரிதான். சற்று நேரத்திற்குப் பிறகு,

மேலும் சில ஊசி வால்கள் வந்தன. தாத்தா எழுப்பிய இனிய கெஞ்சுதல் ஒலியினல் கவரப்பட்டு, நீல அலகுப் பறவைகள்

போல், சாந்தமாய் இறங்கின. நான் மல்லார்டுகளைக் கொன்ற முறைப்படி இவற்றையும் சுட்டேன். ஆயினும் ஒரு சிறகைக் கூட வீழ்த்தவில்லை. டீல் வாத்துக்கள் சில வந்தன, ஏய்ப்புகளுக்கூடே விரைந்தன. ஒன்றை நான் ஒரு மைலுக்கு இழுத்தடித்தேன். கல் போல் கீழே விழுந்தது அது. இன்னென்ன்ற அதே தூரம் ! சுட்டேன். அது மெக்ஸிகோ நோக்கிப் பறந்து

ட்டது.

அந்நாட்களில் ஏராளமான வாத்துக்கள் இருந்தன. கவலைப் படுவதற்கு ஒர் எல்லே இருந்ததில்லை. காலை நேரம் கழிந்ததும் சீதோஷ்ண நிலை வலுவடைந்தது. மேகங்கள் ஒன்று திரண்டு, தணிந்து, கனத்தன. அதனல் வாத்துக்கள் கீழேயே தங்கின. திறந்தவெளி நீர்ப்பரப்பு கொந்தளிப்புற்றதால், வாத்துக்கள் அமைதியான குளங்களைத் தேடின.

T கைச் சதை கறுத்துப் போகும் வரை நான் வெடி மருந் தைத் தீர்த்தேன். அன்று நான் என் மூக்கிலிருந்து சிறிது சுட்டிருந் தால் கூட அதை உணர்ந்திருக்க மாட்டேன். தாத்தா அதிகமாக எதுவும் கற்றுத் தரவில்லை. கடுமையான ஒன்றை நான் சுட்டால் அவர் தலையை ஆட்டுவார். எளிதான ஒன்ன்ற நான் தப்பவிட்டால் அவர் பலமாகத் தலையை அசைப்பார். பறந்தது எதையும் அவர் சுட்டதில்லை. நான் முடமாக்கிய பறவைகள் நிறையவே இருந்தன. அவர் தமது பழந்துப்பாக்கியால் அவற்றின் தலைகளைச் சுட்டெறிந்: தார். முடப் பறவை ஒவ்வொன்றையும் சுடும் தோறும் அவர்