பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மீன்கள் ஒருவன தொல்லையிலிருந்து காப்பாற்றும்

கோடைக்காலம், தென்பகுதியில் வேகமாய் வருவது போலவே, வந்துவிட்டது. மரங்களெல்லாம் கோடை நறுமணம் பெற்றுத் திகழ்ந்தன. மிஸ் லாட்டியின் தோட்டத்தில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. மக்னேலியா முழுமையும் பெரிய, கனத்த, மெழுகு, மய்ப் புஷ்பங்கள் சூடிநின்றன். அம் மலர்களைத் தொட்டால் அவை கபில நிறமாக மாறிவிடும். - -

ஒரு நாள் நாங்கள் விளையாடுவதைத் தாத்தா கவனித்துக் கொண்டிருந்தார். நாங்கள் ஆடி முடித்ததும், என்ன ஆவர் ஓர் புறம் அழ்ைத்தார். நாம் மீன்பிடிக்கப் போவதற்குரியவேளை வந்து விட்டது’ என்று தான் கருதுவதாக அவர் சொன்னர். எந்த ரக மீன்களைப் பிடிப்பது என்பது தான் பிரச்னை.

தாத்தா சொன்னர் : இது கோடைக்காலம். பார மீன் பிடிப்பதற்கு ஏற்ற பருவம் இது அல்ல. கோடையில் நாம் முரட்டு: வேலே செய்வதற்கில்லை. கோடை மீன்பிடிப்பு பற்றி என் எண்ணம் இதுவே.-ஒரு கோலேயும் நீளக் கயிற்றையும் எடுக்க வேண்டியது. புதுநீர் பாயும் ஒடையருகே அமர்ந்து கறுப்பு மீனப் பிடிக்க வேண்டும். அல்லது படகில் ஏறிக்கொண்டு, புள்ளி விழுந்த ஆற்று மீன்கள் நிறைந்த பெரிய வளை எதையாவது தேடிச் செல்ல வேணும் ; கைத் தூண்டிலால் அவற்றைப் பிடிக்கலாம். கோடை மீன் பிடிப்பின் பூரண நோக்கம் மீனப் பிடிப்பது பற்றிக் கவலை கொள்வது அல்ல , வீட்டை விட்டு வெளியே போய், அமைதியா பிருந்து, சிறிது சிந்தனை செய்வதே யாகும். கோடையில் பெண்கள் கடுகடுப்புடன் இருப்பர். நீ எவ்வளவு குறைவாக வீட்டில் சுற்றித். திரிகிருயோ, அவ்வளவு குறைவாகத்தான் தொல்லை ஏற்படும். ‘

வாய்க்காலுக்குப் படகில் போய், ஆற்றுமீன் வளையைத் தேடி, கைத் துண்டிலே வீசிவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்று காத்திருக் கலாம் என நான் சொன்னேன். இது அருமையான கருத்துத்தான்; ஆயினும் கோடை மீன்பிடிப்புக்குக் கூடச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாத்தா கூறிஞர். அவர் பையில் கை விட்டு, ஒரு காசை எடுத்து, என்னிடம் சுண்டி எறிந்தார்.

  • இருல் மீன் கடைக்குப் போய், இந்தக் காசு பெறுமான முள்ளதை வாங்கி வா. அவை புதியதாய், சிறியதாய் இருக்க. வேண்டும். படகுகளில் ஒன்று வந்து சேரும் வரை காத்திருந்து, அவை உயிர்த்துடிப்போடு இருக்கும் பொழுதே வாங்கிவிடு ‘