பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்கள் ஒருவனே தொல்லையிலிருந்து காப்பாற்றும் 39

என்று அவர் சொன்னர். பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் வேண்டாம். அந்தக் காசை என்னிடமே கொடு. நமக்கு வேண்டியதை நாமே பிடிக்கலாம். வீச்சுவலையை எப்படி உபயோ கிப்பது என்பதை நீ இந்தச் சமயத்திலேயே கற்றுக்கொள்ளலாம். நீ அதை ஒழுங்காகச் செய்தால், அது கூட மீன்பிடிப்பது போலவே வேடிக்கையானதுதான் என்று கூறிஞர்.

சிற்றுண்டிக்குத் தேவையானவறறை எடுக்கவும், கூஜாவில் நீர் நிரப்புவதற்காகவும் நான் சமையலறைக்குப் போனேன். கூடாரச் சாமான்கள், அதிகப்படியான படகுகள், மிஸ் லாட்டி சவாரி செய்ய உபயோகித்து வந்த சேணம் ஆகியவற்றை வைத் திருந்த சிறு வீட்டினுள் தாத்தா ஊர்ந்து சென்றார் வலேயைக் ஜாக்கிரதையாகக் கையில் சுற்றி வைத்தபடி, அவர் கழுத்துப் பிடிப்போடும் வசவுகளோடும் வெளிப்பட்டார். அவ் வலையைத் தாத்தாவே செய்திருந்தார். நேர்த்தியான, மென் பின்னலாக, அமையும்படி ஒவ்வொரு நூலையும் முடிந்தும், விளிம்பில் தொங்கும். ஈயக்குண்டுகளே சிரத்தையோடு அகற்றி அளவோடமைத்தும் வலை; தயாரித்திருந்தார். அது ஒரு கலா சிருஷ்டி, அதைச் செய்ய மாரிக்காலம் பூராவும் பிடித்தது என்பது என் நினைவுக்கு வருகிறது. அதே சமயத்தில் அவர் சின்னக் கப்பல் ஒன்றும் செய்துகொண் டிருந்தார். அவர் வேட்டைக்குப் போகாமலோ, பிடில் வாசிக்கா மலோ இருந்த நேரத்தின் பெரும் பகுதி அதிலேயே செலவழிந்தது. நாங்கள் தண்ணிரை நோக்கி நடந்தோம். வலையையும், இரண்டு கைத் துண்டில்களையும் தாத்தா தோளில் சுமந்து. வந்தார். தூண்டில்கள், முனைகளில் குறுக்காக வெட்டிய இரண்டு கம்புகளில் அழகாகச் சுற்றப்பட்டிருந்தன. அவற்றின் கொக்கிகள் கம்பியில் அழுத்தமாய்ப் பதிக்கப்பட்டும், குண்டுகள் தொங்கிக் கொண்டுமிருந்தன. உணவுப் பெட்டி, தண்ணிர்ப் புட்டி, அதிகப் படியான கொக்கிகள், குண்டுகள், மிதப்புகள் முதலியன கொண்ட சாமான் பெட்டி ஆகியவற்றை நான் வைத்திருந்தேன். அதிகக் சாமான்கள் பற்றி தாத்தா மிகுந்த அக்கறை காட்டுவதுண்டு. ஒரு தூண்டில் முள்ளைத் தொலைத்துவிடுகிற மீனவன், மற்றுமொரு முள்ளே வைத்திராவிட்டால், அந்த இடத்தில் இல்லாதொழிவதே நன்று ; அதிகமாக ஒரு துப்பாக்கியைக் கையோடு கொண்டு போகாத வேட்டைக்காரன் காட்டில் நேரத்தை வீணுக்குவான் என்று தாத்தா எப்போதும் கூறுவார். . படகு கரை மீது இழுத்து உலர வைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் துடுப்புகள் கிடந்தன. படகைத் தண்ணிருக்குள் தள்ளி விட்டோம். நான் வெறும் காலுடன் நீரினுள் சென்றேன். மினு மினுக்கும் கோடைக் காலச் சிற்றலைகளிடையே படகை மிதக்கச் செய்தோம். சாமான்களைத் துறையில் ஒரு இடத்தில் வைத்தோம். தாத்தா உந்துகோலை எடுத்து, படகைச் சதுப்பு நிலத்தின் மூலைக் குத் தள்ளினர். அங்கு சேறு வெகு உப்பாகவும், மோசமாகவும்,