பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

வதற்குரிய உண்மையான வழி மீன்பிடிக்கப் போவது ஒன்றே. இப்போது தாம் தீவிரமான மீன் பிடிப்பைக் கவனிப்போம். இதுதான் நிஜமான வேலை. ஆனல் அதைக் கோடைக் காலத்தில் செய்யக் கூடாது. ஜனங்கள் செத்து விழுவதற்கு உரிய காரணங்களில், கோடைக் காலத்தில் கடுமையான வேலைகளைச் செய்வதும் ஒன்று ஆகும்.

தம்மையே எடுத்துக் கொள். பெண்களிடமிருந்து விடுபட்டு ஒரு தினத்தை இனிமையாகக் கழித்தோம். அநாவசியமான பிரச்னைகளே வைத்து ஒருவரை ஒருவர் அலட்டிக்கொள்ளவில்லை. வீச்சு வலேயை எப்படி எறிவது என்பதை நீ கற்றாய், இன்று பிற்பகலில் நாம் மிக ஏராளமான மீன்களைப் பிடித்துவிட்டோம். ஆகவே இப்போது நாம், நமது குறைகள் நீக்கப்பட்டு, பசியோடு, காேப்பாக, சாப்பிடவும் படுத்துறங்கவும் தயாராக வீடு செல் கிருேம். பெண்கள் கோபத்துடன் காணப்படமாட்டார்கள். ஏனெனில் பகல் பூராவும் நாம் அவர்களுக்கிடையே திரியவில்லை. அதற்கும் மேலாக, அனைவருக்கும் போதுமான மீன்கள் வேறு உள்ளன. ஒருவகையில் நாம் வீரர்கள்தாம். பிறர் நம்மைப் பார்க்காத விதத்தில் நாள் பூராவும் சோம்பி இருப்பதற்கு வேண்டிய ஞானம் இருந்ததே, அதனுல்தான். ‘

பிறகு தாத்தா என்ன நோக்கிப் பேசினர் : ; பிறர் பார் வையில் நீ ஒருபோதும் சோம்பேறியாக இருக்கக்கூடாது. இதை நீ கற்பது அவசியம். சோம்பி இருப்பது இனியதுதான். ஆளுல் ஊக்கமுள்ளவர்கள் முன்னுல் நீ சோம்பித் திரிந்தால் அவர்கள் உன்னை வெறுப்பது இயல்பு. பெண்களிடமுள்ள தொல்லை களில் இதுவும் ஒன்று. அவர்களுள் ஒரு டைனமோ இருக்கிறது. அவர்கள் ஊக்கத்தால் இயங்குகிறார்கள். உழைப்பு தேவைப் படாத எதன் மூலமும் ஆண் உல்லாசம் பெறுவதைக் கண்டால் பெண் ஆத்திரம் கொள்கிருள். அதனுல்தான் மீன்பிடிப்பு கண்டு பிடிக்கப்பட்டது. உழைப்போர் பார்வையிலிருந்து அது நம்மை அப்புறப்படுத்துகிறது. சோம்பேறி ஆட்கள்தான் மிகச் சிறந்த மீனவர்களாக விளங்குகிரு.ர்கள். முடிவில் அவர்கள் நன்னிலை அடைவதும் உண்டு. ஏனெனில் தங்கள் மூளையைக் குழப்பங்களி விருந்து விடுவித்து, உண்மையான தெளிந்த ஆதாரங்களில் ஈடு படுத்த அவர்களுக்கு நேரம் கிடைக்கிறது.

“ எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறவர்களை நான் புகழ்வ தில்லை. சிறு ஈக்களை ஓங்கி அடித்து, கொசுக்களைத் தப்பவிடுகிற ரகத்தினர் அவர்கள். சதா முட்டாள்தன அலுவல்களின் காரண டிாக அங்கும் இங்கும் ஒடித் திரிவதால், அமைதியாக உட்கார்ந்து சிந்தனை செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதேயில்லை. துடுப்பு கள் மீது சற்றுக் கடுமையாகச் சாய்ந்து இழு, பையா, நான் குத்திக் காட்டுவதில் வன்மை பெற்று வருகிறேன். ‘

நாங்கள் மீண்டும் கடலோரம் வந்து சேர்ந்தோம். படகைக்