பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

மாதிரித் தோன்ற வைப்பதற்காக ஒரு எலும்புத் துண்டு-இவ் வனவே, அதை வீசி எறிந்த்தும், முதலில் கவ்வும் உரிமைக்காக நீதி மீன்கள் சண்டை போடும். படகின் வேகம் அவற்றை அரை வாசி சாகடிக்கும். எனவே நாம் அவற்றை அப்படியே அள்ளி எடுத்துப் போட வேண்டியதுதான். நீயே முயற்சி செய்து பார் ‘ என்று தாத்த சொன்னர். * - -

ற்ற தூண்டில் ஒன்றை ஆவர் என்னிடம் தந்தார், த் துண்டை நான் நீரில் எறிந்தேன். கயிறு இருபது கெஜம் கூட நீண்டிராது ; அதற்குள் தூண்டில் வளைந்து தாழ்ந்தது. படகு ஒரு திசையிலும், மீன் வேருேரு திக்கிலும் போது முயன்றதால், துண்டின் இழுப்பது மிகவும் கஷ்டமாகத்தானிருந்தது. ஆயினும் நான் மீனே உள்ளே இழுத்துப் போட்டேன். அது அருமையான நீல மீன். சுமார் இரண்டு ராத்தல் கனமிருக்கும். வெயிலில் உருக்கு நீலமாய் மின்னியது அது. அதன் வாய் சிறியதாய், சண்டைக் கிழுப்பதாய், கூசிய பற்களோடு விளங்கியது. நூறு மீன்களில் முதல் மீன் அது. சிறியன சில. அவற்றை நாங்கள் தண்ணிரி லேயே வீசி விட்டோம். சில பெரியன. ஒன்று நான்கு ராத்தல் கனமிருந்தது.

பிறகு மாக்கரெல் கூட்டத்தினூடே தூண்டில் எறிந்தோம். வேக இயக்கத்துக்கு ஏற்ற உருவமும், புள்ளிகளும் பெற்ற பெரிய மீன்கள் அவை. அவற்றின் மோவாய் பாரக்கூடா மீனின் மோவாய் போலிருந்தது. இப்பவும் பழைய கதைதான். காலை ஆணி பத்துக்கு நாங்கள் முடிவு கட்டிய போது, படகு நிறைய மீன்கள்--நீலம், மாக்கரெல், பானிட்டோ, பெரிய ராஜ மீன் இரண்டு-இருந்தன. கடற்கரைப் பாதுகாப்பு நிலையம் முழு மைக்கும், பாதி நகரத்துக்கும் விருந்திடப் போதுமான மீன்கள் கிடைத்திருந்தன. தாத்தர் சொன்னது போல, முதல் டஜனுக்கு ஆப்புறம் அவற்றைப் பிடித்ததில் உல்லாசமில்லேதான். ஆனல் சிறு கொப்பரையிலும், குடிலின் முன் தாத்தா அமைத்த பெரிய சட்டியிலும் பொரிக்கப்படுகையில் அவற்றிடம் குறை எதுவும் காணப்படவில்லை.

சுத்தம் செய்வதற்கு முன்பு கொல்லப் படவேண்டிய நிலையில்உயிர்த்துடிப்போடு புதுமையாய்-இருந்து, பொரிக்கப்பட்ட நீல மீன் அல்லது மாக்கரெல்லைச் சுவைக்கும் பேறு பெருத மனிதர்களுக்காக நான் உண்ழையாகவே வருந்துகிறேன். நீலமும் மாக்கரெல்லும் அதிகமான கொழுப்பும் எண்ணெய்ச் ச த்தும் பெற்றுள்ளன் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனல், நத்தை, இப்பிப் புழு முதலி ய வ ற் ைற விரும்பாதவர்களும், காரட்டுக் இழங்கு மிகவும் நேர்த்தியானது எனச் சொல்கிறவர்களும் இருக் கிறார்களே. தாத்தா சமையல் செய்த முறையினல், எந்த மீனும் இயல்பாகப் பெற்றிருக்கும் சுவையினும் மிக்க சுவையுடையதாய் இருந்தன. அவர்அவ்ற்றை வெறுமனே வெப்பமான கரிக்கங்குகள்