பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் 5

நான் கயிற்றைச் சுருட்டி இழுக்கத் தொடங்கினேன். வட, லிருந்து கயிறு இரைச்சலிட்டு விலகியது. அதைச் சரிப்படுத்தி இழுப்பதற்குள் என் விரல்கள் மேலும் கொஞ்சம் புண்ணுயின. தாம் நினைத்த மூப்பாக இழுக்கும் இரண்டு குதிரைகளோடு சேர்த்துக் கட்டுண்டிருப்பதுபோல் தோன்றியது எனக்கு. துண் டிலில் மாட்டியிருப்பது எதுவாயினும், அது என்னை ஆழ்கடலில் அமிழ்த்தவே துடிக்கிறது என நினைத்தேன் நான். சற்றே வளைந்து, தூண்டில் விறைப்பைப் பாதுகாக்க அதன் நுனியை உயரமாக வைத்தபடி, நான் மெதுவாக பின்னுக்கு நடக்கலானேன். சுழல் வட்டு என் வயிற்றருகிலும், தூண்டில் கம்பு புஜத்தின் கீழும் இருந்தன. - இறுதியில், மணல். குன்றுகள் ஆரம்பமாகி, கடல் ஒட் பயிர் வளர்ந்து நின்ற இடம் சேர்ந்தேன். மீன்கள் நீரிலிருந்து வெளிப் பட்டதையும், வெள்ளிய மணலில் கூட துள்ளிக் கொண்டு போராடியதையும் நான் பார்க்க முடிந்தது. கடற்கரையில் கிடக்கும் உயிருள்ள கட்டைகள் போல் தோன்றின. அவை. நான் கயிற்றை வட்டில் சுற்றியபடி அவற்றை நோக்கி நடந்து, மணல் மீது அவை கிடந்த இடத்தை அடைந்தேன். இரண்டும் பெரிய நீலமீன்கள். ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு ராத்தல் இருக்கும், காலால் உந்தும் பந்து விளையாட்டைப் பூரணமாக ஆடியது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

நான் வெகு விரைவில் ஒய்ந்து போனேன். ஏனெனில் துரண் டிலும் வட்டும் கனமாயிருந்தன. நான் சரியாக எறிந்த ஒவ்வொரு முறையும் இரண்டு பெரிய நீலமீன்கள் என்னோடு கட்டுண்டு பொருதன. சிக்கும் மீன்களைப் பிடிப்பதற்கு பதினைந்து முதல் இருபது நிமிஷங்கள் வரை ஆயின. நான் இழந்த மீன்கள் இவ்வளவு காலத்தைப் பறிக்கவில்லை. மொத்தத்தில் நான் கரை சேர்த்ததை விடத் தப்ப விட்ட மீன்களே அதிகமாகும்.

காரிருள் கவிந்த போது நான் குளிர்ந்து, நனைந்து, உடல் எங்கும் நோவுற்று இருந்தேன். என் கைகள் வெட்டுப்பட்டு, எரிக்கும் உப்பு நிறைந்து விளங்கின. என் முதுகு, அசைவு கொண்ட பல் போல் வலித்தது. ஆயினும் நான் ஒரு டஜன் பெரிய நீல மீன்களைப் பிடித்திருந்தேன். பத்து ராத்தல் கன்முள்ள பீப்பா மீன்-வெண்மையான முதுகின் மீது பெரிய கரும் புள்ளி

கொண்டது-ஒன்றையும் பிடித்திருந்தேன்.

சிறிது நேரம் சென்றதும், நான் அலைகள் எற்றிய கட்டைகள் சிலவற்றைச் சேகரித்து தீ மூட்டினேன். பச்சையாக முல்லட் மீனத் தின்னவும்-அது மிக்க சுவை உடையது-தாத்தர் உழைப் பதைக் கவனிக்கவும் உட்கார்ந்தேன். சந்திரன், ஏகதேசம் பூரண மாய், எழுந்தது. நான் கண்டிராத, அல்லது கற்பனை கூடச் செய் திராத, காட்சி அது. தாத்தா நீரிலிறங்கி, சதுப்பில் தூண்டில் எறிந்தார். பின்னுக்கு நகர்ந்து, சடாரெனத் தூண்டிலேச் சுண்டு