பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் - 53

நனப்பதில்லை. மாலைக் காற்றில் லேசாகக் குளிர்மட்டும் இருந் தது. உறுத்தும் உஷ்ணத்தால் மயிரைக் கொட்டிக்கொண்டு, அமைதியற்றுக் கிடந்த நாய்கள், மருந்து கொடுக்கப்படாமல்ே மீண்டும் நன்னிலை அடைந்தன. சவாரியை எதிர்பார்த்து வாக னத்தை நோக்கி நின்றன.

கோடையின் பால்மய வாசனை காற்றிலிருந்து நீங்கியது. அதற்குப் பதிலாக, எரியும் இலைகளின் நாற்றமும், திராட்சை களின் புளிப்பு வாசனையும் சேர்ந்தன. நம் தேகத்தில், ரத்தம் கோடைச் சோம்பலால் மந்தமாக இல்லாமல் இப்போது துள்ளி ஒடியதை உணர முடிந்தது. தோசைகள், மசாலையிட்டுச் சமைத்த இறைச்சி, உடைத்து நொய்யரிசியோடு கலக்கப்பட்ட முட்டை ஆகியவை கொண்ட சூடான காலே உணவு இனிதாய் ருசித்தது. இலைகள் ஒரங்களில் சிறிதே சுருங்கி மடிய ஆரம்பித்தன. நீர் பெருகிய சதுப்பு நிலங்களிலிருந்து சதுப்புக் கோழிகளை அழைத்து வரும் முதல் வாடை க் காற்று ஏற்கனவே வந்து போய்விட்டது. சொற்பமான வாத்துக்கள்-முக்கியமாக, உல்-வந்திறங்கத் தொடங்கின. -

இலையுதிர் காலத்தின் ஆரம்ப நாட்கள், அதிகாலையில் புல் துணிகளில் வெண்மை சேர்க்கப் பனி வருவதற்கு முன்னுல்- சிங்கா பின் காய்கள் முள்முள்ளான தோடுகளினுள் பழுத்துத் திகழ்வ தற்கு முன்னுல்-நம் வாயைத் திருகும் படிக்காரச் சுவையை பெர்சிம்மன் பழங்கள் இழப்பதற்கு முன்னல், மெளனமாக உறுதி கூறும் உளக்கிளர்ச்சி உங்களுக்குத் தெளிவாக நினைவிருக் கிறதோ என்னவோ, நானறியேன். டிசம்பரின் இருபத்தி மூன்றாவது நாள் மாதிரி-கிறிஸ்துமஸ் நம்மிடையே வரவில்லை. ஆயினும் நம் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு நெருங்கி விட்டது போல்-தான் இதுவும்.

வார இறுதியில் கர்ம சிரத்தையோடு நாங்கள் மீன் பிடிக்கச் சென்ற காலம் இதுதான். நீண்ட, மென்மையான சதுப்புகள் தவிர்ந்த ஏனைய இடமெல்லாம் எப்பொழுதும் மீனுடன் விளங்கிய குளிர்ச்சியான, சாம்டில் வண்ணக் கடலிலே மீன் பிடித்தோம் ; குடாக்களில் பிடித்தோம்; கடலினுள் நீளச் சென்றிருந்த அலை தாங்கியிலும் மீன் பிடித்தோம். அது கூர்ஸ் பீயர் என அழைக் கப்பட்டது என்றே நினைக்கிறேன். அதனருகில் மீன் பிடிக்க ஏதோ கொஞ்சம்-பத்து சதம் அல்லது இரண்டு காசுகள்-செலவாகும். பீயரிலிருந்து, நூற்றுக் கணக்கான மீனவர்கள் தூண்டில் எறிவதை தான் பார்த்திருக்கிறேன். அந்நாட்களில் மீன் பிடிப்போரிடையே தொழில் ம்ரியர்தை அதிகமிருந்தது. ஒருவன் மிகப்பெரிய கால் வாய் மீனைப் பிடித்துவிட்டால், பக்கத்திலுள்ள எல்லா மீனவர் களும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு அவன் அந்த மீனைக் கரை சேர்ப்பதற்குத் துணை புரிவர்.

ஆளுல் கூர்ஸ் பீயர் அருகில் பெரிய மீன்கள் அதிகமிருந்த