பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் -

கிடையாது. தாத்தா வகைப்படுத்தியிருந்த விதிகளில் தகர்க்க முடியாத விதி இது வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு முன்னுல், பாத்திரங்களேக் கழுவித் துடைத்து உரிய இடத்தில் வைக்க வேண்டும் படுக்கையை ஒழுங்குபடுத்தி, தரையைச் சுத்தம் செய்ய வேண்டும் ; அனைத்தினும் முக்கியமாக, நீண்ட், மஞ்சள் குச்சியும் செந்தலையும் பெற்ற தீக்குச்சிதொட்ட உடனேயே நெருப்பு உயிர்பெற்றுப் பிரகாசிப்பதற்கு வசதியான பக்குவ நிலையில் கனலை விட்டு வைத்திருக்கவேண்டும். நெருப்பிடம் நாம் மிக அதிகமான மதிப்பு வைக்கமுடியாது; பார்க்கப் போனுள் மனிதனே மிருகத்திடமிருந்து வேறுபடுத்துவது நெருப்புதான் என்று தாத்தா சொல்வார். நான் அவரை நம்புகிறேன். திறந்த நெருப்பெரியிடம் இல்லாத வீட்டினுள் வசிப்பதை விட, வெளி முற்றத்தில் வசிக்கவே நான் விரும்புவேன்.

நான் செய்வதற்கு என்றுமே பின்னிடாத கடமைகளில் ஒன்று, எரிபொருள் நிர்வாகத்தின் உபதலைவராக இருப்பதாகும். காலே நேரங்களில், சூரியன் வெப்பமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் போது, பிற்பகல் காற்றும் மேகங்களும் கடற்கரையைக் குளிர்ப் படுத்துவதற்கு முன்னர், விறகு தேடித் திரிவதில் எனக்கு ஆசை உண்டு. எங்களிடம் அற்புதமான விறகுக் கட்டைகள் சேர்த் திருந்தன-சோகமாய் திருகிமுறுகிய பழங் கட்டைகள், உப்பினால் மங்கிய வெண்ணிறம் பெற்றவை, பெரிய மரத்துண்டுகள், சிதைந்த படகுகளின் பலகைகள், இவை போன்ற இன்னும் பல பொருள்கள். எல்லாம் காற்றில் உ ர்ந்து, வற்றக் காய்ந்தவை. அவற்றிலுள்ள உப்போ எதுவோ, கட்டைகளை மெதுவாகவும் நிதானமாகவும், மதுசாரம் எரிவது போல், நீலக் கொழுந்து விட்டும் எரியச் செய்தது. உப்பு, மண், கடல் முந்திரி, தி எல்லாம் கலந்த மனம் பரவும். அதன் கீழே வைப்பதற்குத் தேவையானவை : தூண்டில் இரையைச் சுற்றியதால் பசை ஏறிப் பின் சுருட்டிக் கசக்கப்பட்ட பழைய தாளும், ஒன்றிரண்டு மரச் சிராய்களும் தான். அப்புறம் தீக்குச்சியால் கீச்சியதும், கிழவி ஒருத்தியின் பசு லாந்தரை உதைத்ததும் சிகாகோ நகரம் பற்றி எரிந்ததே அதுமாதிரி, இதுவும் குபுக்கெனப் பற்றிக் கொள்ளும். r.

நெருப்பு இரைச்சலிட்டு எரியும் பொழுது, விளக்குகளில் ஒன்றை அணைத்து விடலாம். ஏனெனில், அற்புதமாக ஆடி மினுமினுக்கும் ஒளியைப் பரப்புகிறது அந் நெருப்பு, அதில் படிக்க முய்ன்றால் கண்கள் கெட்டுவிடும். ஆயினும், உண்மை மிக்க ஆபிரஹாமை ஜனதிபதியாக உயர்த்திய பெருமை அதற்கு உண்டு என நான் நம்புகிறேன். நெருப்பின் பக்கம் முதுகைத் திருப்பி, கால் சட்டையின் பின்புறத்தைக் கதகதப்பாக்குவோம். வெடித்துச் சுருங்கிய கைகளை அதில் வாட்டிச் சிறிது குளிரைப் கடிப்போம். அதன் பிறகுதான் நான் உட்கார்ந்து, தாத்தாவின் பூட்ஸ்ை அகற்றுவேன். அவரது பாதங்களில் ஒன்றை என்