பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 {} . . . தாத்தாவும் பேரனும்

அவரும் தாத்தாவும் ரொம்ப காலமாக நண்பர்கள். இருவரும் உலகம் பூராவும் சுற்றி வந்திருக்கிரு.ர்கள். சதா அவர்கe: வீட்டின் முன்வாசல்புறத்தில் உட்கார்ந்து, புகை பிடித்தபடியே, நான் பிறப்பதற்கு முந்தி எப்பவோ அவர்கள் நிகழ்த்திய விஷ மங்களைப் பற்றிப் பேசி மெதுவாகச் சிரித்துக் கொண்டிருப்பார் கள். என் பாட்டியான மிஸ் லாட்டி அங்கே வந்தால் அவர்கள் உடனடியாக வாயடைத்துப் போவதை நான் கவனித்தேன். சிவ சமயங்களில் இருவரும் ஆற்றாேரமாக உலாத்திவிட்டு வீடு திரும் புகையில் அவர்களைச் சுற்றிலும் கனிந்த நறுமணம் சிறிது நிலவு வதை நான் நுகர முடிந்தது. தாத்தா தன் குளிரைப் போக்குவ தற்கென்று அவர் அறையில் வைத்திருந்த மருந்தின் வாசனையைப் பெரிதும் ஒத்திருந்தது. அது. தாத்தாவின் நண்பருக்கு மிஸ்டர் ஹோவர்ட் என்று பெயர். -

நாய்கள், துப்பாக்கிகள், கூடாரம் முதலியவற்றாேடு கிளம்பி, தகளிலிருந்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் அல்லன்ஸ் க்ரீக் எனும் குடாவுக்குப் பின்னுள்ள காட்டில் ஒரு வார காலம் தங்குவது என்று அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நாட்கணக்கில் அதைப் பற்றிப் பேசியும், சமையல் சாதனங்களைச் சேகரித்தும், அதையும் இதையும் வாங்குவதற்கெனக் கடைக்குப் போய் வந்தும், உடுப்புகளை எடுத்து வைத்தும் பொழுது பேர்க் கினர். என்னிடம் அதுபற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல வில்லை. நான் அங்கு இல்லாதது மாதிரியே அவர்கள் நடந்து கொண்டனர். நானும் நல்லவனுக இருந்தேன். சாப்பிடும்போது என்னிடம் பேச்சுக் கொடுத்தாலொழிய, நானுக வாய் திறப்ப தில்லை. சாப்பிடுவதைவிட அதிகம் வேண்டும் என்று நான் கேட் கவேயில்லை. அனைத்தையும் சுத்தமாகவும் சீராகவும் வைத்திருந் தேன். தாகமெடுத்த வேட்டை நாயின் நாக்குப்போல, என் நாக்கும் வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. ஒருநாள், என்னல் மேலும் பொதுக்கமுடியவில்லை.

நானும் போக விரும்புகிறேன். நான் ஒழுங்காக நடந்து கொண்டால், உன் சுருட்டுகளேத் திருடாமல் இருந்தால், நீரில் மூழ்கிப் போகாவிடில், என்னையும் முகாமுக்கு இட்டுச் செல்வதாக நீ சென்ற கோடையின்போதே உறுதி கூறினய் ‘ என்று நான் சொன்னேன். - - * நீ என்ன நினைக்கிறாய், நெட்? முகாமில் சிறுசிறு வேலைகளைச் செய்யவும், தண்ணீர் எடுக்கவும், அதுபோன்ற பலவற்றுக்கும் இவனைப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். ‘ என மிஸ்ட்ர் ஹோவர்ட் தாத்தாவிடம் கூறிஞர். -

தாத்தா சொன்னர் : “ எனக்குத் தெரியாது. அநேகமாக அவன் பெருந்தொல்லையாகவே விளங்குவான். ஒருவேளை அவன் வழிதவறிப்போய்விடலாம். நாம் அவனைத் தேடி அலைய நேரிடும். அல்லது. ஏதோ, மான் என்று எண்ணி நம்மில் ஒருவரைச் சுட்டுவிடு