பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட் 61

வான். அல்லது சீக்கில் விழலாம். காலை அல் லது வேறு எதையாவது முறித்துக் கொள்வான். எப்பொழுதும் அவன் எதையேனும் உடைத்துக்கொண்டே இருக்கிருன். எலும்பு முறி யும் சப்தம் காதில் விழுந்துகொண்டே யிருப்பதால், இந்த வீட்டில் ஒருவன் அமைதியாய் பேப்பர் படிக்க முடிவதில்லை.

போகுது போ, நெட். அவனேயும் கூட்டிச் செல்வோம். அவனுக்குச் சில விஷயங்களை நாம் கற்பிக்கலாம். அவன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால், அவனை மோட்டாரில் வைத்து, பீட் அல்லது டாமை துனே சேர்த்து, வீட்டுக்கு அனுப்பி விடலாம் ‘ என்று ஹோவர்ட் சொன்னர். .

‘ நல்லது. அவனையும் அழைத்துச் செல்வது என்றுதான் நான் ஆதி முதலே திட்டமிட்டிருந்தேன். ஆனல் அவனுகக் கேட்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறது என்று பர்ர்ப்பதற்காகக் காத்திருந் தேன் எனத் தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னர்.

அந்தப் பழைய லிஸ் என்னும் காரில் நாங்கள் ஏகப்பட்ட சுமை களேத் திணித்தோம். மிஸ்டர் ஹோவர்ட், தாத்தா, நான், பறவை பிடிக்கும் நாய்கள் இரண்டு, வேட்டை நாய்கள் இரண்டு, அணில் களுக்கு எமனுக விளங்கிய நாய் ஒன்று; வாத்துக்களைச் சாகடிக்கும் பாய்ச்சல் நாய் ஒன்று. அப்புறம், டாம், பீட் எனும் கலப்பு இந்தியர்கள். காட்டாள்களான இவர்கள் தங்கள் வருஷத்தை நான்கு பகுதிகளாக வகுத்திருந்தன்ர். கோடையில் மீன் பிடிப்பர். இலையுதிர் காலத்தில் வேட்டையாடுவார்கள். மாரிக் காலத்தில் தானியங்களிலிருந்து மதுக் காய்ச்சுவர். வசந்த காலத்தில் அதைக் குடிப்பார்கள். பெரிதாய், கறுப்பாய், ஒல்லியாய் தோன்றிய அவர்கள், மிக்க அமைதியும் வலிமையும் வாய்ந்தவர்கள். மீன் பிடிக்கும் காலத்தில், போகி மீன்கள் பெரியதாய், சிவப்பாய் கொழுப்பு மிகுந்து கூட்டம் கூட்டமாகத் திரியும் பருவத்தில், அவ் விருவரும் தாத்தாவுக்காக உழைப்பார்கள். நாய்கள், காடுகள், தண்ணிர், வேட்டைக்குரியன பற்றி-நான் அறிய விரும்பும் ஒவ் வொன்றைப் பற்றியும்-அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பின் வீட்டில், நாய்களும் ஆட்களும், சமையல் சாமான்களும் துப்பாக்கிகளுமாக நிறைந்து விட்டன. சின்னதும் பெரிதுமான இரு கூடாரங்கள் காரின் உயரே வைத்துக் கட்டப்பட்டிருந்தன. சதுப்பு நிலத்தில் மரக்கட்டைகளாலும் களிமண்ணுலுமான ரஸ்தாவின் புடைப்புகள் மீது ஒடியபோது எங்களுடைய பழைய தகர் டப்பா, பாயிலர் பாக்ட்ரி மாதிரி ஒன்ச எழுப்பியது. பிரயது ணத்தின் பொழுது நான் ஒன்றுமே பேசவில்லை. நான் ஆதிகம் பரபரப்பு அடைந்திருந்தேன். மேலும், அவர்கள் என்ன விட்டுக்குத் திருப்பி அனுப்பி விடல்ாம் என்ற எண்ணமும் எனக்கிருந்தது, ஆங்காங்கே மரங்களும், மிகுதியான புல்லும் வளரும் பிரதேசத்தின் நீண்ட, மஞ்சள் நிறக் குன்றுகளில் மேதி அடித்த வாறு சில மணி நேரம் பிரயாணம் செய்து, பெரிய குளம்