பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்

தார். தாத்தா மேலும் பல கட்டைகளை நெருப்பில் போட்டிருந் தாா. .

இப்போது நீ படுத்துக் கொள்ளலாம். படுக்கையின் நடுவில் படு. நாம் அதிகர்லேயில் எழுந்திருக்க வேண்டும். நமக்கு வான் கோழி அகப்படலாம் ‘ என்று தாத்தா சொன்னர்.

நான் பாதரட்சைகளை நீக்கிவிட்டு, துப்பட்டியினுள் புகுந்து கொண்டேன். ஆந்தை அலறலும், தீயின் முன்னல் அசுரக் கரும் உருவங்களென அமர்ந்திருந்த் மனிதரின் முணுமுணுப்பும் காதில் விழுந்தன. என் கீழேயிருந்த பைன் இலைகளின் பாய் அற்புதமான வர்ச்னை தந்தது ; துப்பட்டிகள் கதகதவென்று இருந்தன. நெருப்பு கூடாரத்தினுள் வெம்மை வீசியது. என் வயிறு நன்கு நிறைந்திருந்தது. நான் உணர்விழப்பதற்கு முன், அடுத்த நான் சுவர்க்க் இனிமை பெற்றதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

தாத்தா தன் முழங்கையால் என் விலாவில் குத்தி என்னை

எழுப்பியபோது குளிர் பயங்கரமாக இருந்தது. எழுந்திரு. பையா. தீயைச் சரி பண்ணு ’’ என்றார் அவர். நட்சத்திரங்கள் இன்னும் மின்னிக்கொண்டிருந்தன ; ஆகாயம் பனிமயமாக

விளங்கியது. கூடாரங்களின் மூலைகளைச் சுற்றி காற்று கீச்சிட்டுத் திரிந்தது, சதுப்பின் கரிய பகைப்புலனில் நெருப்பு மிகவும் சொல்பமாய் மின்னுவது புலப்பட்டது. மிஸ்டர் ஹோவர்ட் அவரது பகுதியில் கிடந்து குறட்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் மீசை, காற்றில் சதுப்பு நிலப் புல் ஆடி அசைவது போல், துடித்துக் கொண்டிருந்தது. டாமும், பீட்டும் உறங்கிய கூடாரத்தில் இரண்டு வகைக் குறட்டைகள் ஒலித்தன. ஒன்று: இர்ரொலி செய்தது. மற்றது, முள்வேலியில் மாட்டிக்கொண்ட காளை போல் சப்தமிட்டது. நான் நடுங்கியவாறே போர்வைக் குள்ளிருந்து வெளிப்பட்டு, வேட்டை பூட்ஸை அணிந்தேன். அவை விறைப்பாகவும் மிகக் குளிர்ந்துமிருந்தன. எனக்கிருந்த இதர உடைமைகளை அகற்றாமலே தான் நான் தூங்கி எழுந்தேன், நெருப்பு மிகவும் ஒடுங்கிக்கிடந்தது. அது அவிந்து பழுப்புச் சாம்பலாக அடங்கிவிட்டது. காலே இளங்காற்றில் சுற்றிச் சுழன்றது. நேர்த்தியான பழுப்பு மாவு போன்ற சாம்பலின் அடியில் சிறிய செங்கண் ஒன்று லேசாக ஒளி சிமிட்டியது. என் பூட்வில்ை கொஞ்சம் சாம்பலைத் தள்ளிவிட்டு, மினுமினுக்கும் கரியின் மீது விற்குச் சிருய்கள் சிலவற்றை வைத்தேன். பசிய ஒக் மரக்கட்டைகளை அதன் மேலே போட்டுவிட்டு, தி பற்றுவதற்காகக் காத்திருந்தேன். அது பற்றிக்கொண்டது. தீயின் சிறிய சுவாலை பெரிதாகி ஒக் கட்டைகளைத் தின்னத் தொடங்கியது. விரைவிலேயே பெருந் தீ பற்றியது, நான் அதனுள் சிக்கிவிட்டதுபோல் தோன்றினேன். அன்று காலையில் குளிர் நிதானமாகத் தானிருந்தது. .