பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்,

மான் ஏதாவது இக் கிளைவழியே வந்தால், அது அங்கேதான் வெளிப்படும். அங்குதான் பாதை வெட்ட வெளியில் கூடுகிறது. சதுப்பை விட்டு விலகாது தாண்டிச் செல்ல வேறு பாதை இல்லை. நீ கவனியாதிருக்கும்படி நாய்கள் ஏமாற்றாது பார்த்துக் கொள். அவற்றின் குரைப்பு ஒரு மைலுக்கு அப்பால் கேட்டால், அநேக மாக மான் உன் கண் முன்னுல் வந்து குதிக்கக் கூடும். சில சமயம் மான்கள் நாய்களைவிட இரண்டு மைல்கள் முந்திச் செல்லும். அப் போது அவை நழுவிச் செல்லுமே தவிர, வேகமாக ஓடுவதில்லை. ஓசை எழுப்பாத கால் குளம்புகளால் வெறுமனே வழுக்கி நழுவிச் செல்லும். நீ ஆடாமல் அசையாமல் இரு. நீ அசைவற்றிருந்தால், உன் வாடை அதன் பக்கமாக வீசாதிருந்தால், ஒரு மான் உன் தலைக்கும் மேலாக ஒடும். ஆனால், நீ கண்ணைச் சிமிட்டினுல்கூட, அது இருநூறு கெஜத்திற்கு அப்பாலேயே கண்டு விடும் ; வேறு: வழியே ஒடி மறையும் ’’ என்று தாத்தா சொன்னர்.

நான் அடிமரத்தின் மேல் அமர்ந்தேன். தாத்தாவும் மிஸ்டர் ஹோவர்டும் அப்பால் சென்றனர். அவர்கள் மறைகையில், அமைதியாகப் பேசிக்கொண்டு போனதை நான் கேட்க முடிந்தது. நான் என்னைச் சுற்றிலும் கவனித்தேன். இப்பொழுது அதிகமாக எதுவும் நடைபெறவில்லை. என் தலைக்கு மேலே இரண்டு ஆண் அணில்கள் பெருத்த சண்டை போட்டுக் கொண்டிருந்தன. கிளை களில் வேகமாக ஓடி, அணில்மொழி ஏச்சுக்களை அள்ளி வீசின. ஒரு சிக்காடி, செடி ஒன்றில் தலை கீழாக நின்று சிக்காடி ஓசைகள் எழுப்பியது. செந்தலை மரங்கொத்தி ஒன்று வளரும் ஒக் மரத்தின் அடிப்பகுதியைத் தன் அலகால் கொத்தி இரண்டாக்க முயன்றது. மழைக் காக்கை-அது ஒருவகைக் கக்கூதான்-எனக்குப் பின்னல் சதுப்பில், சோக ஒலிகள் எழுப்பிக் கொண்டிருந்தது. முதிர் புற்ற பெரிய மஞ்சள்சுத்தி ஒன்று மரத்துக்கு மரம் ஆழ்ந்து எழுந்தும் சிறகடித்தது.

எரிந்து கருகிய தரையின் ஒரு இடத்தில் து தம்முள் உரையாடியவாறே, தத்தித் திரிந் கரைந்தன. இரண்டு புருக்கள் ஒஇத்தில் கிளுகிளுப்பதற்காக உள்ளே பிருண்டிக் கொண்டும், ஒ.

குறும்புள்ள .ெ ம்ப் போலவே இக

ல் ஒரு விதமாம், விதமாய் இ: