பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தான். நான் ரத்த மயம் ஆனேன். அரைவாசி ஜீரணமான மான் உணவு என் தலே முதல் இடுப்பு வரை வடிந்தது. $.

அந்த அசிங்கத்தை நான் என் மீதிருந்து தட்டித் துடைத்த :படி என் தலையை ஓடையில் அமுக்குவதற்காக ஒடியபோது தாத்தா சொன்னர் : இது உன்னைப் பெரியவளுக்குகிறது. நீ ரத்த ஸ்தானம் பெற்றுவிட்டாய், பையா. இன்றிலிருந்து நீ என் றைக்காவது ஒரு மானைத் தப்பவிட்டாயானல், உன் சட்டை வாலே நாங்கள் வெட்டிவிடுவோம். இது மிக நல்ல ஆண் மான், இதற்காக நீ மிக மிகப் பெருமை கொள்ளலாம். இதை அவர் மெதுவாகக் கூறினர். - -

டாமும் பீட்டும் நீண்ட மரக்கன்று ஒன்றை வெட்டினர்கள். கானின் கால்களில் முழங்கால்களின் குருத்தெலும்புக்குப் பின்னுல் கீறினுர்கள். இளமரத்தைப் பிளவுகளுக்குள் திணித்து, மானைத் தூக்கித் தங்கள் தோள்கள் மீது தொங்கவிட்டார்கள். அவர்கள் அதை சதுப்பு வழியே எடுத்துச் சென்றபோது, திடீரென்று தாத்தா மிஸ்டர் ஹோவர்ட் பக்கம் திரும்பினர். ஹோவர்ட், உனக்குச் சம்மதமானுல், நாம் நம்முடைய மானிடம் சென்று அதை பும் முகாமில் சேர்த்துவிடலாம். அது கால் மைல் தூரத்துக்குள் தான் கிடக்கிறது. அங்கே காட்டுப் பூனைகள் அதை நாசமாக்கு வதை நான் விரும்பவில்லை என்றார்.

‘ என்ன மான் ? என்று கேட்டேன். இன்று சாயங்காலம் நீ சுடவேயில்லை. காலையில் நீ சுட்டதைத் தப்ப்விட்டாய்-’

தாத்தா சிரித்தார். புகைக்குழாயைப் பற்ற வைப்பதுபோல் பாவனை பண்ணிஞர். ‘நான் அதைத் தப்பவிட வில்லை, தழந்தாய். உனது முதல் மான் விஷயத்தில் உனக்குத் தாழ்மை மனுேபாவம் ஏற்படக்கூடாது என்று விரும்பினேன். நீ இதைச் சுடாமல் இருந்தால்-என் மர்னேவிட் இது எவ்வளவோ சிறந்ததுநான் அதை அப்படியே மரங்களுக்கின்ட்யே போட்டுவிட்டு, அது பற்றி வாயே திறப்பதில்லை என்று தீர்மானித்தேன். ஒரு மானைப் பாழாக்குவது அவமானம் தான். ஆனல் ஒரு பையனைப் பாழாக்கு வது கூட வெட்ககரமானது தான் ‘ என்றார், -

அப்பொழுதுதான் நான் பெரிய மனித ஞக இருப்பதை விட்டு விட்ட்ேன் என்று நினைக்கிறேன். நான் என் வாயைத் திறந்து கூப்பாடு போட்டேன். ஆஞ்ல் ஒருவரும் என்னைப் பார்த் துச் சிரிக்கவில்லை.