பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( தாத்தாவும் பேரனும்

நடந்தது இதுதான் : நான் தலைவனைக் கொன்றபோது, டாமும் பீட்டும் தாத்தாவும் குறி வைத்துச் சுட்டு அவற்றைச் சாகடித்தார்கள். பிறகு, பறவைக் கூட்டம் ஒட முயல்கையில் அவர்கள் மறுபடியும் சுட்டு வெற்றி கண்டார்கள். இரண்டு கோழிகள் மட்டும் வெறும் காயம்பட்டு ஓடிவிட்டன.

அது ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். நான் கொன்றது-துண்டுத் தோலைவிட முரடானது-பத்தொன்பது ராத்தல் கனமிருந்தது. ஒரு வான்கோழிக்கு அது மிகுதியான கனமே என இப்பொழுது நான் உணர்கிறேன். பத்து ராத்தல் நிறையுள்ள ஆண் பறவைகள் இரண்டு இருந்தன. பெட்டைகள் எல்லாம் ஆறு, ஏழு, எட்டு சாத்தல் கனத்தோடு, தின்னச் சுவை, உடைய சதையோடு விளங்கின.

எங்கள் கார் வீடு வந்து சேர்ந்ததும் நாங்கள் கண் கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தோம். அது சரி-எங்கே அது ? பார்க்க லாம். என்ற முகபாவத்தோடு மிஸ் லாட்டி எட்டிப்பார்த்தாள். தாங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் போட்டோம். பெரிய புதிய காட்டு வான்கோழிகள் ஏழைக் கண்ட பிறகும் பாட்டியால் தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் மூஞ்சியில் விழித்திருக்கவே கூடாது என்று நான் அலுத்துக் கொள்கிற அளவுக்கு, அவ் விடுமுறை நாட்கள் முழுவதும் வான் கோழிக்கறி கிடைத்தது. இந்த அருஞ்செயல் பற்றித் தாத்தா அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. கிறிஸ்துமஸுக்கும் புதுவருஷ நாளுக்கும் நடுவில் ஒரு நாள் அவர் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, பொருள் பொதிந்த நீதி வாக்கியம் ஒன்றை முனு. முணுத்தார்.

“ மனிதரிடமும் வான்கோழிகளிடமும் உள்ள தொல்லை இதுதான் . ஆசை காட்டப்படுகிற வேளைகளில் பாதையின் எந்தப் பக்கத்தில் தங்கவேண்டும் என்பதை அவர்கள் அறிவதில்லை என்று அவர் சொன்னர்.

என்ன வளர்த்த புெரியவர்களைப் பற்றி நான் மறக்காத முக்கிய விஷயங்களில், கிறிஸ்துமஸின்போது அவர்கள் எனக்குத் தேவையான பொருள்களைப் பரிசாக வழங்கியதில்லை என்பதும் ஒன்று ஆகும். தேவையானவை’ என்பதை விளக்க விரும்பு கிறேன். அடுத்த வீட்டில் வசித்த ஒரு சிறுவன எனக்குத் தெரியும். அவன் சதா மதிப்பு மிகுந்த பொருள் எதையாவதுபுதிய பாதரட்சைகள், புது உடுப்பு போன்றவற்றை-பரிசாகப் பெறுவது வழக்கம். அவை உபயோககரமானவை, பொருளா தார லாபமுடையவைதான். ஆனல் ஒரு வீட்டின் கூரையில் ஆற்புதம் எதையும் நான் கண்டதில்லை. ஒரு வீடு என்றால் அதற்கு இயல்பாகவே கூரையும் இருக்கவேண்டும். கிறிஸ்தும்ஸ் பரிச்ாக் அதை அடைய வேணும் என்று கருதப்படுவதில்லை. ஒரு பையன் பள்ளி உடுப்போ, புதுச் செருப்பேர் பெறுகிருனென்றால், அவை