பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே 93

யதும் நாங்கள் கரைக்குத் திரும்புவோம். இதற்குள் நான் என் கத்தியை எடுத்து, அநேக சிப்பிகளைத் திறந்து விடுவேன்.

சிப்பிகளைத் திறப்பது எளிதான காரியம்தான். கத்தி அலகின் தடித்த பின்புறத்தால், சிப்பியின் மெல்லிய கருக்கமைந்த விளிம்பு களே நசுக்க வேண்டும். கத்தி நுனியை உள்ளே திணித்து, நம் கையை ஒரு சுற்றுச் சுழற்ற வேண்டும். சிப்பி திறந்து விடும். உள்ளே புழு உப்பு மயமாய் சுத்தமாகச் சிப்பி ஒட்டுடன் ஒட்டிக் கிடக்கும். அப்பொழுதுகூட உப்புக் கடல் நீரைக் கசிய விடும் அது. அந்தத் தண்ணிர் நம்மை விறைக்க வைக்கும் அளவுக்குக் குளிர்ந்திருக்கும். அதற்குப் பிறகு நான் எவ்வளவோ சிப்பிப் புழு தின்றிருக்கிறேன். ருசிகரமாக்ச் செய்த மசாலையும் சேர்த்துத் தான். எனினும் முன்பு சகதிக் குள்ளிருந்து வெளிவந்த பெரிய சிப்பிகளைப் போல் இதர புழு எதுவும் சுவை பெற்றிருந்ததாக எனக்கு நினைப்பில்லை.

சிப்பி சேகரிப்பது சாகசப் பயணங்களில் ஒன்றே ஆகும். கிறிஸ்துமஸ் மரம் கொண்டு வருவது மற்றாென்று. இப்போதெல் லாம் ஜனங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை விலைக்கு வாங்குவதாகத் தெரிகிறது. நாங்கள் ஒரு வருஷத்துக்கு முந்தியே ஒரு விடார். மரத்தைக் கண்டு பிடிப்போம். அது தகுந்த அளவும் அமைப்பும் பெற்றிருப்பதுடன், தேடிப் பிடிப்பதற்குச் சிரமம் தருவதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் நம் கண் முன்னலேயே அதை வேறு எவளுவது அபகரித்துக் கொள்வான். குடும்பம் முழுவதும்அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிமார், நாய்கள் எல்லோரும்காரில் ஏறி, அந்த மரத்தைக் கொண்டுவரச் செல்வோம். அது ஒரு விசேஷ நிகழ்ச்சியே.

நாம் வெகு சீக்கிரமே போக முடியாது. ஏனெனில் புது வருஷ தினம் வந்து போகிறவரை மரம் பசுமையாக இருக்க வேண்டும். ஆகவே, கிறிஸ்துமஸ்-க்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நாங்கள் போவோம். அம் மரத்தைக் கண்டு பிடித்தது நானுக இருந்தால், பெரிய சதுப்பில் உள்ளே தள்ளியோ அல்லது கசப்பு பெரிச் செடிகள் மண்டிய ஒரு இடத்திலோ உள்ள ஒன்றையே குறி வைத்திருப்பேன். அப்பொழுதுதான் அணில் அல்லது மான் ஏதாவது எதிர்ப்படும் என்று சாக்குச் சொல்லி நான் துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியும். -

மிஸில்டோ, ஹோலி ஆகிய செடிகளைச் சேகரிப்பது எனது விசேஷ உரிமையாகும். மிஸில்டோ நல்லதாக வேண்டுமென்றால், அதை நாடி மரத்தின்மேல் உயரே ஏற வேண்டும். கலிஃபோர் னியச் செம்மரம்போல் ஓங்கி வளர்ந்த ஸ்ைப்ரஸின் உச்சியில் தொத்திப் படர்ந்திராத மிஸில்டோவை நான் நாடுவதே கிடை யாது. சிறிய, வெண்மையான, வசீகரமுள்ள பழங்கள், கரும் பச்சை இலைகளைப் பின்னணியாகப் பெற்று, உயரே மேக மண்டலத் தருகே, பிறர் சத்தை உறிஞ்சியபடி உல்லாசமாய்க் கொலுவிருட்