பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 * தாத்தாவும் பேரனும்

பதைக் காண முடியும். இது நேர்த்தியானது, ஒரு பெரிய ஆள் செய்ய முடியர்ததைச் சிறுவன் ஒருவன் சாதிக்க முடியும் என நிரூபிப்பது. நான் ஒரு கத்தியைப் பற்களால் கடித்துக் கொண்டு புறப்படுவேன்.-ஆம்ாம், புற்களால் பற்றித்தான், ஏனெனில், ‘பொக்கிஷத் தீவு” கதையிலிருந்து ஆவதரித்த மிஸ்டர் இஸ்ரேல் ஹேண்ட்ஸ் நான்தான்-கிளைகள் மீது குரங்கு மாதிரி ஏறி, மிஸில்டோவை வெட்டிக் கீழே எறிவேன். _

ஹோவி பெர்ரிச் செடிகள், தனிந்த புதர்களில் வளர்வதால், சுலபம்ாக அகப்படும். எனினும், கூரிய மயிரடர்ந்த இலைகளின் இருண்ட ச்ெழும்ையான பச்சை நிறத்தினூடே சிவப்பாக மினு மினுக்கும் பழ்ங்களின் தோற்றம் நம் உள்ளத்தைத் துள்ளச் செய்யும். எல்லாவற்றையும் நாம் சேகரித்து விடு சேர்த்த பிறகு, பெண்கள் அவற்றைக் கொண்டு வேலை செய்யத் தொடங் கியதும், விட்டில் காட்டு முகாமின் மணம் பரவி விடும். விடாரின் வாச்னேயும், ஹோலிப் பூண்டின் சுத்தமான, பிற்பகல் நேரச் சதுப்பு வாடையும், பிசின் வடிந்தபடி தீயில்ை வெடித்துக் கொண்டு பற்றி எரியும் சுள்ளிகளுக்கு மேலாக உள்ள பெரிய ஒக் அல்லது ஹிக்கரிக் கட்டைகளிலிருந்து வரும் புகைமய நறு நாற்ற மும் குழம்பி மிதக்கும்:

ப்ொதுவாகப் பெண்கள், பையனுக்கும் பெரியவர்களுக்கும் தொல்லேயே யாவர். எனினும் விழா நாட்களில் அவர்கள் தங்கள் உண்மை மதிப்பை நிரூபித்து விடுவர். என் பாட்டி மிஸ் லாட்டி அடுப்பு வேலையில் மிகவும் தேர்ந்தவள், அவள் தயா ரிக்கும் பதார்த்தங்களின் வாசனை, பசுந் தழைகளின் வாடை, வருஷத்தின் இதர நாட்களில் காணவே முடியாத அநேக விசித்திர விசேஷப் பொருள்களின் மணம் ஆகியவற்றால் வீடே கலகலப்புற். றிருக்கும். -

செப்டம்பர் மாதத்திலிருந்தே மிஸ் லாட்டி சில பழக்கேக்குகள் தயாரித்து வைத்திருப்பாள். யந்திரத்தின் சக்கரங்கள் போல் பெரிதான அவற்றில் கரும்பச்சைக் கிடாரங்காய், உலர்ந்த முந்திரி, சர்க்கரைப் பாகுபெற்ற செர்ரி, ரசம் நிறைந்த திராட்சை வற்றல் எல்லாம் கலந்திருக்கும். அதில் ஒரு துண்டைத் தின்றாலே மயக்கம் ஏற்படும்படி அந்தக் கேக் பிராந்தியில் நன்கு ஊறியிருக்கும். பழக் கேக் என்றும் வீட்டில் இருக்கும். ஏனெனில் தாத்தா அடிக் கடி உள்ளே போய் அதில் ஒரு துண்டை எடுத்து விழுங்கி, புதிய பிராந்தியில் கொஞ்சம் குடிப்பது வழக்கம். அதை ஒரு தகர டப்பாவில் மூடி வைத்தால் ஜூன் மாதம் முடிய கேக் பதம் கெடாது இருக்கும். ;

கிறிஸ்துமஸின் போது மூன்று விதமான கேக்குகள் கிடைக்கும். சூரிய பழக் கேக். லேவி ஒயிட் என்று பிறர் குறிப்பிடும் ஒரு ரகக் கேக். இது கன்னங் கரிய் கேக்கின் சுந்தரத் தம்பி ஆகும். அப் புறம் பவுண்ட் கேக் என்று ஒன்று. இது மென்மையான ஐஸ்,