பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.மேற்கத்தைய அரைக் காலனித்துவம், யப்பானிய ஏகாதிபத்தியம், உள்நாட்டுப் பிரபுத்துவம் ஆகிவற்றிற்கு எதிரான சோசலிசப் புரட்சியாக அமைந்தது சீனாவில்.

அமெரிக்காவின் நவகாலனித்துவத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாகவும் சமூக மாற்றத்திற்கான புரட்சியாகவும் அமைந்தது கியூபப் புரட்சி.

ஆசியாவில், நவகாலனித்துவத்திற்கு எதிரான விடுதலைப்போராட்டமாக அமைந்த வகையில் ஈரானியப் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரிசையில் நிக்கரகுவா புரட்சியும், எல் சவ்வடோர் போராட்டமும் அடங்கும்.

பல்தேசிய இன அரசமைப்புகளைக் கொண்ட நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை நிகழும்போது, அவ்வாறு ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றோ பலவோ அந்த அரசிலிருந்து பிரிந்து தமக்கென ஒரு புதிய அரசை நிர்மானிப்பதற்கான போராட்டம் அகக் காலனித்துவ எதிர்ப்புப் (Anti Internal Colonialism) போராட்டம் ஆகும். அயர்லாந்து, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டங்களும், சைப்பிரஸில் துருக்கிய இனப்போராட்டமும், பிலிப்பைன்ஸில் மித்தனாபோராட்டமும் மேற்கூறிய பிரிவுள் அடங்கும். இந்த வரிசையில் எமது தமிழீழ விடுதலைப் போராட்டமும் இடம் பெறுகிறது.

ஆக, விடுதலைப் போராட்டங்களும், புரட்சி அனுபவங்களும் கூடகாலத்திற்குக் காலம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. இவை காலம், இடம் என்பவற்றிற்கும் மேலாக சர்வதேச அரசியல் சூழல், புவியியல் அமைப்பு, அரசியல், சமூக அமைப்புப் போன்ற பல்வேறு காரணிகளையும் பொறுத்து மாறுபடுகின்றன.

எனவே, அத்தகைய வரலாறுகளையும் அனுபவங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டு மக்கள்.அறிவதன் மூலம், அத்தகைய வரலாறுகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் எந்ததெந்த அம்சங்களை நேரடியாகவே தாமும் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்களைத் தமக்கேற்ப மாற்றத்துடன் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்கள் தவிர்க்கப்டவேண்டும், அல்லது செய்யத் தக்கவை எவை, செய்யத் தகாதவை எவை போன்ற அம்சங்களை அறிந்துக்கொள்ளலாம்.

அவ்வாறு நோக்குமிடத்து, ஐரிஷ் (அயர்லாந்து) விடுதலை போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமை உண்டு. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ந்த அந்தப் போராட்டம் 750 ஆண்டுகளாகியும் இன்னும் தொடர்கிறது. அந்த நீண்ட வரலாற்றில் பல அரசி யல் தலைவர்களும் விடுதலைப் போராளிகளும் அப்போராட்டத்தை முன்னெ

8