பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14
ஆஷ்டவுனுக்குப் பின்னால்


ஆஷ்டவுனில் வைசிராயைச் சுட்டு வீழ்த்துவதற்காகச் செய்யப்பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போராட்டத்திற்குப் பிறகு காயமடைந்த தான்பிரீன் தோழர்களுடன் சைக்கிளில் விரைவாக வந்து டப்ளின் நகரத்தின் வடபாகத்தில் தங்கியிருந்தான். மற்ற நண்பர்களை பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான். பிறகு பிப்ஸ்பரோ வீதியிலிருந்த திருமதி டுமி அம்மாளுடைய வீட்டில் அவன்தங்கி வைத்திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே. எம். ரியான் என்ற பெரிய வைத்தியரும், மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொரு வைத்தியரும் அடிக்கடி அவனைக் கவனித்து வந்தனர். டுமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள், இமைகள் கண்ணைக் காப்பதுபோல, தான்பிரீனைக் காத்துவந்தாள். தான்பிரீன் படுத்த கட்டிலை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.

ஆஷ்டவுன் சம்பவத்திற்குப் பின்னால் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. அவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார். எந்த விசேஷத்திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோன்றுவதில்லை; மாளிகைக்குள்ளேயே அடைந்து கொண்டு கிடந்தார். கடைசியாக அவர் சீமைக்குச் செல்லும் பொழுது கூட ஆயுதந்தாங்கிய வீரருடன் பல மோட்டார் கார்கள் வீதியின் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காகச் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் சிப்பாய்கள் வழியெங்கும் அணிவகுத்து

98