15
மீண்டும் திப்பெரரி
1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீனுடைய காயம் குணமடைந்து வந்ததால் அவன் சென்ற ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஓய்விருந்தது.
ஸோலோஹெட்பக்கில் போடப்பட்ட வித்து முளைவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது. புரட்சிக் காரியங்களைப் பற்றி மக்களும் தொண்டர்களும் நன்றாய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கைகள் மிகவும் உதவி புரிந்தன. அயர்லாந்தில் செய்யப்பட்ட குற்றங்கள் என்று பிரிட்டிஷ் சர்க்கார்வெளியிட்ட அறிக்கைகளில் புரட்சிக்காரருடைய செய்கைகளே வர்ணிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் குற்றங்கள் என்று கூறிய பகுதிகள் தொண்டர்களுடைய சூரத்தனங்களை விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய பட்டாளங்களும் போலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகளையும் சிறிது கூட வெளியிடவில்லை. எத்தனை நிரபராதிகளுடைய வீடுகள் நள்ளிரவில் சோதனையிடப்பட்டன. ஒருபாவமும் அறியாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப்பட்டனர்! துன்புறுத்தப்பட்டனர் எத்தனை ஊர்களில் ராணுவச்சட்டம் அமுல் செய்யப்பட்டது. எத்தனை சங்கங்களும் கூட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறப்பட்டன. இவற்றையெல்லாம் சர்க்கார் உலகிற்கு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்துவிட்டது. அயர்லாந்தின் உண்மைப் பிரதிநிதித்துவமுள்ள மாபெரும் சபையான டெயில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று
101