பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

16
புதிய போர்முறை


1920ஆம் வருஷம் ஆரம்பத்தில், அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நிச்சயமான போர் தொடுத்துவிட்டது என்பதை உலகத்திற்கு அறிவிப்பதற்காகத் தொண்டர்கள் புதிய போர்முறையைக் கைக்கொண்டனர். அவர்கள் போலிஸ்கார்கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கித் தேசம்முழுவதும் குழப்பத்தை உண்டாக்கி வந்தனர். அக்காலத்தில் பீலர்கள் ஊர்க்காவலுக்காகச் சுற்றுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். அவர்கள் வெளியே சென்றால் உயிருடன் திரும்புவது நிச்சயமில்லாமல் இருந்தது. அவர்கள் தங்கள் படைவீடுகளை விட்டு வெளியறேமுடியாமல் உள்ளே அடங்கிக் கிடந்தனர். தொண்டர்கள் பீலர்களைச் சந்தித்துப் போராட வழியில்லாமையால் அவர்களுடைய படைவீடுகளிலேயே போய்ச்சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். பட்டிகளிலும் சாலைப்புறங்களிலும் இருந்த படைவீடுகளையெல்லாம் காலிசெய்து பெரிய படைவீடுகளில் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தொண்டர்கள் தங்களை எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு இரும்புக் கதவுகள் போட்டுக் கொண்டதுடன் சுற்றிலும் முட்கம்பி வேலிகளும் அமைத்துக் கொண்டனர். அந்தச் சமயத்தில் தொண்டர்களின் தீவிரமான போராட்டம் தேசம் முழுவதிலும் பரவியது. பிலர்கள் காலிசெய்த ஆயிரம் படைவீடுகள் ஒரே நாள் இரவில் அக்கினிக்கு இறையாக்கப்பட்டன. அவற்றைத் தொண்டர்கள் ஏன் எரித்தனர் என்றால் பின்னால் பட்டாளத்தாரும் பீலர்களும் அவற்றில் வந்து தங்க இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

105