பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அந்தச் சமயத்தில் பீலர்கள் தாங்கள் போலிஸார் என்பதை அறவே மறந்து விட்டனர். போலிஸார் பொது மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அடிமை நாடுகளில் போலிஸார் கடமைகளை கைவிட்டுத் தேசபக்தர்களை அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாரைப்போல் சண்டை செய்வதையுமே கடமையாகக் கொண்டிருப்பார்கள். சுருங்கச் சொன்னால் ஐரிஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்டாளத்தாரைப்போல் யுத்தம் செய்துவந்தனர். எனவே மக்கள் அந்நிய அதிகாரிகளின் ராணுவத்தாரைப் பகைத்ததைக் காட்டிலும் தங்கள் கூடவேயிருந்து கொள்ளி வைக்கும் பீலர்களை மிக அதிகமாய்ப் பகைத்தனர். தொண்டர்களும் பீலர்களுடைய வம்சத்தைக் கருவறுத்துவிடவேண்டும் என்று முற்பட்டனர். பீலர்கள் எந்தெந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினார்களோ அங்கெல்லாம் தொண்டர்கள் தங்களுடைய போலிஸை நியமித்துக் கொண்டு திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் அடக்கி வந்தனர். எந்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளைக்காரர்கள் தொண்டர்களுடைய போலிஸ் படைக்கு அடங்கி ஒடுங்கிக்கிடந்தனர்.

ஐரிஷ் போலிஸார் மக்களைத் திருடரிடமிருந்து பாதுகாக்கும் கடமையை கைவிட்டதோடு நிற்கவில்லை. தொண்டர் படையினர் களவு முதலான குற்றங்களைச் செய்தவர்களைக் கைது செய்தால் போலிஸார் அக்குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு, அவர்களைப் பிடித்த தொண்டர்களையே தண்டித்துச் சிறைகளில் போட்டு வந்தனர். அக்காலத்துப் பத்திரிகைகளில் இது சம்பந்தமான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தன. மீத்தலுகாவில் ஒரு முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய் பயங்கரமான ஒரு கொலையைச் செய்து விட்டான். போலிஸார் அவனைக் கைது செய்து விசாரணையில்லாமலேயே விடுதலை செய்து விட்டனர். தொண்டர்கள் கையில் அவன் சிக்கிவிடாமல் தேசத்தைவிட்டு வெளியேறி விடும்படியும் அவர்கள் புத்தி சொல்லியும் அனுப்பினராம் ஆனால் அந்த ஆங்கில சிப்பாய் போலிஸாரிடமிருந்து விடுதலையடைந்து ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டர்களால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டான்!

அதே சமயத்தில்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தை அடக்குவதற்காகப் பிளாக் அன்டு டான் பட்டாளத்தார் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இந்த விசித்திரமா பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரந்தான் 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தார் எமதூதர்களுக்கு நிகரானவர்கள். 1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் போலிஸ் படையிலிருந்து விலகிவிட்டதால் அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயரைச் சேர்த்து அனுப்பும்படி ஸர் கமார் கிரீன்வுட் என்பவர் ஆங்கில அரசாங்கத்திற்கு யோசனை சொன்னார் கிரீன்வுட்டின் நோக்கம் ஆயிரக்கணக்கான புதியபட்டாளங்களைக் கொண்டு

106