பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


அயர்லாந்தில் சகிக்கமுடியாத கொடுமைகளைச் செய்து அடக்கி விடவேண்டும் என்பதே. புதிய பட்டாளத்தில் சேர அயர்லாந்தில் ஆள்கிடைக்கவில்லை. இங்கிலாந்திலும் யோக்கியமானவர்கள் அதில் சேர விரும்பவில்லை. ஆதலால் பிழைப்பில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த பல பழைய ஆங்கில சிப்பாய்களையும், தாழ்ந்த நிலையிலிருந்த வகுப்பினரையும் கிரீன்வுட் பட்டாளமாகச் சேர்த்தார். அந்தப்பட்டாளத்தில் பெரும்பாலும் குற்றவாளிகளும், கேடிகளும். பலமுறை சிறை சென்றவர்களுமே நிறைந்திருந்தனர். அவர்கள் அயர்லாந்திற்கு வந்தபோது அரசாங்கத்தாரால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உடைகள் கொடுக்கப்படுவது வழக்கம். புதியதாய் வந்தவர்களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க வழியில்லாமையால் சர்க்கார் கைவசமிருந்த சில கறுப்பு உடைகளையும், கபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்தனர். இதனால் புதிதாக வந்தவர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்ந்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டைகளையும், கபிலச்சட்டைகளையும் அணிந்திருந்தனர். சட்டை ஒரு நிறம், குல்லா ஒரு நிறம், காற்சட்டை வேறு நிறம் இவ்வாறு கறுப்பும் கபிலமும் கலந்து ஆபாசமான பழைய உடைகளை அணிந்திருந்த பட்டாளத்தாரைக் கண்டவுடன், ஐரிஷ் மக்கள் நகைத்து ஏளனம் செய்தார்கள். மிகவும் சாமத்ர்தியசாலிகளாதலால் புதியபட்டாளத்திற்கு 'பிளாக் அன்டு டான்' என்று பெயர் வைத்தனர். ('பிளாக் அன்டு டான்' என்றால் கறுப்பும் கபிலமும் கலந்தது என்று பொருள்). அயர்லாந்தில் நாக்லாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் கபிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாய்களுண்டு. அந்த நாய்கள் 'பிளாக் அன்டு டான்' என்று அழைக்கப்பட்டு வந்தன. மக்கள் அந்த நாய்களின் பெயரையே புதிய பட்டாளத்துற்கும் சூட்டினார்கள். புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் கேடாக நடந்து கொண்டதால், அவர்களுக்கச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானதுதான்!

இனி போலிஸ் படைவீடுகள் தாக்கப்பட்டதைக் கவனிப்போம். முதல் முதலாகக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்திலுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படைவீடுகள் தாக்கப்பட்டு அங்கேயிருந்த போலிஸார் தொண்டர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டனர். அந்த போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் மூன்று மணி நேரத்திற்குப் பின்னால் உள்நாட்டுக்கலகத்தில் கொல்லப்பட்ட வீரர்களுள் ஒருவர்.) லியாம் லிஞ்ச் பிறவியிலேயே தளகர்த்தா. ஒரு பெரிய பட்டாளத்தை அணிவகுத்து நிறுத்தயும், அடக்கவும், சாமர்த்தியமாய் நடத்தவும் அவர் வல்லமையுடையவர். அவரும் ஸீன் மோய்லன் என்ற மற்றொரு தளகர்த்தாவும் சேர்ந்து கொண்டு பிரிட்டி ஷார்திகைக்குப் படி அற்புதமான போராட்டங்கள் செய்திருக்கிறார்கள்:

ஸியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும் கம்பீரமான தோற்றமும் உடையவர். அவருடைய கண்களில் காணப்பட்ட ஒளியே அவர் போர் வீரர் என்று அறிவு

107