பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அங்கு போராடிய சிப்பாய்களுடன் ஜெனரல் லூகாஸும் நின்று கொண்டிருந்தார். இவ்விஷயம் தொண்டர்களுக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. அவர் 29ஆம் தேதி இரவே தப்பியோடி பல பல வயல்களையும் மைதானங்களையும் தாண்டி தொண்டர்களுடைய கையில் சிக்காமல், மிக்க எச்சரிக்கையுடன் மறைவாக லிமரிக் வீதிக்கு வந்து சேர்ந்தார். அதன் வழியே நடந்துசெல்லுகையில் தற்செயலாய் அங்கு வந்து கொண்டிருந்த ராணுவக் கார் அவரைக் கண்டதும் அதிலிருந்த சிப்பாய்கள் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

தொண்டர்கள், சண்டையின்போது அவரை அடையான, கண்டு பிடிக்கவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் 'ஜெனரலை மீண்டும் பிடிக்க முயற்சி' என்று பெரிய எழுத்துகளிற் செய்தி வந்த பின்பே அவர்களுக்கு லூகாஸ் தப்பியோடிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் சிப்பாய்களை வழிமறித்துப் போராடச் சென்றிருந்த போதிலும் பத்திரிகைகள் லூகாஸை மீண்டும் பிடிக்கவே அவர்கள் போராடியதாக கற்பனை செய்து எழுதின.

ஊலாச் சண்டை நடந்து சென்று சில தினங்களுக்குப் பின்பு தான்பிரீன் டப்ளினுக்குச் சென்று பாக்கியிருந்த பல சில்லறை வேலைகளை, முடித்துவிட்டான். ரீயர் கிராஸ் படை வீடுகளைத் தாக்கிய பொழுது அவனுடைய உடம்பில் தைத்திருந்த வெனிகுண்டுகளின் கண்ணாடித்துண்டுகளையும் ஆணிகளையும் எடுத்தெறிந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குத்தக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் அதை அவன் உபயோகித்துக் கொண்டான்.

மேற்சொன்ன சம்பவங்கள் நடந்து 1920ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அக்காலத்தில் தேசியயப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வந்தது. மக்கள் கடைசி வலை போராடியே தீர வேண்டும் என்று உறுதி கொண்டனர். 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தாருடைய கொடுமைகள் சகிக்க முடியாமல் இருந்தன. அவர்கள் வடுகளையும் தெருக்களையும் பயிர்களையும் கொளுத்திப் பல உயிர்களையும் வதைத்து வந்தார்கள். அரசியல்வாதிகளைக் கைதுசெய்து கொண்டு போகும் பொழுது சுட்டுத்தள்ளி வந்தனர். நித்திரை செய்துகொண்டிருந்த மக்கள் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வந்தனர். யாருக்கும் உயிரும் சொத்தும் உரிமையாக இருக்கவில்லை. ஆதலால் மக்கள் ஒன்றும் செய்யாமல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும புரட்சிப்படையிலே சேர்ந்து வீரமரணம் அடைவது மேலென்று கருதினார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு உணவும் உடையும் கொடுத்ததோடு அவசியமான செய்திகளையும் துப்புகளையும் அறிந்து கூறி உதவி செய்து வந்தார்கள்.

ஆங்கிலப் பட்டாளத்தார் அயர்லாந்தில் எத்தனை கோடிபவுண்டு பெறுமானமுள்ள சொத்துக்களை அழித்தனர் என்பதையும் எத்தனை ஆயிரம்

உயிர்

114