பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

18
கொலைக்கூட்டத்தின் முயற்சிகள்


தலைநகரில் இருந்த தொண்டர்கள் படைத்தலைமை அதிகாரிகளிடம் தான்பிரீன் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்திட்டத்தின்படி 'பறக்கும் தொண்டர் படை' யென்று சில படைகளை நியமிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காது, தேசம் முழுவதும் சுற்றித்திரிந்து எங்கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரிடும்; எல்லையற்ற கொடுமைகள் செய்யும் அதிகாரிகள் எந்த ஊரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும்; எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ எங்கெல்லாம் அதிகாரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிறார்களோ, அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மக்களையும் அதிகாரிகளையும் தட்டி எழுப்பிவிடும். அடிமை நாட்டில் அமைதி நிலவியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம். ஆதலால், விடுதலை வேட்கையுள்ள மக்கள் ஆட்சி முறையை எப்பொழுதும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை பெரிய உதவியாயிருக்கும் என்று தான்பிரீன் கருதினான்.

தொண்டர் படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பலர் தங்களுடைய சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு இடையிடையேதான் தேசிய வேலைக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்

116