பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


டன. நாக்லாங்கில் ஸீன் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும்படி தான்பிரீன் திப்பெரரிக்குச் சொல்லியனுப்பி ஏமாந்து போனதன் காரணம் இதுவே. பாதிநேரம் வேலை செய்தவர்கள், திடீரென்று வெளிவந்து எந்தக்காரியத்திலும் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் பகல் முழுவதும் சொந்தத் தொழில்களைப் பார்த்து விட்டு, இரவில்தான் தேச ஊழியத்திற்கு வரமுடிந்தது. மேலும் மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க்கிலும் ஒரு பெருங்குறை அவர்களிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதியான நேரத்தை அமைதியான வாழ்க்கையிலே கழிந்து வந்ததால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்பட வில்லை. எப்போழுதும் போரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவனையும் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர்களே வீராவேசத்துடன் இருக்க முடியும். ஆதலால் முழுநேரமும் தொண்டு செய்யக்கூடியவர்களை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப் பயிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரிகளின் கீழ் கட்டுப்பட்டிருக்கும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அதன்படி வாலிபர்களும் நூற்றுக்கணக்காக முன்வந்தனர்.

'பறக்குந் தொண்டர்' படைகளை ஏற்படுத்தியதால் திப்பெரரியிலும் கார்க் பகுதியிலும் இருந்த வாலிபவீரர்கள் மிகவும் பிற்போக்காயிருந்த கில்கென்னி, வாட்டர் போர்டு பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற்பாட்டினால், தேசத்தில் ஒரு பகுதியில் ஊக்கமும் மற்றொரு பகுதியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும் ஆவேசத்தைப் பரப்ப வழி ஏற்பட்டது.

தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னிலேஸி என்னும் அவனுடைய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடவேயிருந்து உதவி செய்து வந்தான். லேஸி தேசத்திற்கே உழைக்கவேண்டுமென்று ஜன்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச்செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்றான். திப்பெரரிப் பகுதியிலுள்ள கோல்டன் கார்டன் (தங்கத்தோட்டம்) என்பது அவனுடைய சொந்த ஊர். அவன் மிக்க தேகக்கட்டோடு விளங்கியதோடு, ஓட்டத்திலும், கால்பந்து விளையாட்டிலும் பெரிய சூரனாயிருந்தான். அவனுடைய வீடு தான்பிரீனுடைய வீட்டிலிருந்து அரைமைல் துரத்திலிருந்தது. தான்பிரீனும் அவனும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஓருயிரும் ஈருடலுமாகப் பழகிவந்தார்கள். வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலைபார்த்து வந்தான்.

1920ஆம் ஆண்டுமே மாதம் கில்மல்லக்கில் நடந்த போராட்டத்தில் அவன் கலந்து கொண்டான். அதுமுதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீரப்போராட்டங்களைக் கேட்டுப் 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தார்.அவனைப்பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் செய்தனர். திப்பெரரியில் அவன் சிலநாள் தங்கியிருந்த வீட்டைக்கூட அவர்கள்

117